Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியா Vs தென்னாப்பிரிக்கா முதல் டெஸ்ட்- பிளேயிங் 11, பிட்ச் ரிப்போர்ட், வானிலை அறிக்கை

சென்ஞ்சூரியன்: இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி சென்ஞரியனில் இன்று தொடங்குகிறது.

இந்திய நேரப்படி இன்று மதியம் 1.30 அணிக்கு இந்தப் போட்டி நடைபெறுகிறது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர வலைப் பயிற்சியில் ஈடுபட்டனர்

இந்தப் போட்டியின் பிளேயிங் 11, பிட்ச் ரிப்போர்ட், வானிலை அறிக்கையை தற்போது காணலாம்.

ஆடுகளம்

ஆடுகளம்

சென்ஞ்சூரியன் ஆடுகளம் இந்தியாவுக்கு ராசி இல்லாத மைதானமாவே உள்ளது. இங்கு இந்திய அணி இதுவரை 2 முறை விளையாடி, இரண்டு போட்டியிலும் தோல்வியை கண்டுள்ளது. சென்ஞ்சூரியம் ஆடுகளம் முதல் 2 நாட்கள் தொய்வாக காணப்பட்டாலும், பின்னர் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக செயல்படும். ஆடுகளத்தில் தற்போது புற்கள் உள்ளது. இது போட்டி தொடங்குவதற்கு முன் கொஞ்சம் வெட்டப்படலாம். இதனால் பெரும்பாலும் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக ஆடுகளம் செயல்படும்

வானிலை

வானிலை

போட்டியின் முதல் 2 நாட்களுக்கு அவ்வப்போது மழை பொழிவு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், போட்டி பாதிக்கப்படும். மேகமூட்டத்துடன் காணப்படும் என்பதால், வேகப்பந்துவீச்சாளர்கள், சென்ஞ்ரியன் அடுகளத்தில் சிறப்பாக செயல்பட வாய்ப்புள்ளது. இதனால் ஆட்டம் டிராவாகும் வாய்ப்பு குறைவு தான்

இந்தியா பிளேயிங் xi

இந்தியா பிளேயிங் xi

இந்திய அணியை பொறுத்தவரை தொடக்க வீரராக மாயங் அகர்வாலும், கே.எல்.ராகுலும் களமிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அணியின் ரஹானேவுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என தெரிகிது. இந்திய அணியின் விவரம் பின்வரும்மாறு, 1, மாயங் அகர்வால், 2, கே.எல்.ராகுல், 3, புஜாரா, 4, விராட் கோலி, 5, ரஹானே. 6, விஹாரி/ஸ்ரேயாஸ், 7, ரிஷப் பண்ட் 8, அஸ்வின், 9, முகமது ஷமி, 10, முகமது சிராஜ்/இஷாந்த் சர்மா, 11,. பும்ரா

தென்னாப்பிரிக்கா xi

தென்னாப்பிரிக்கா xi

தென்னாப்பிரிக்க அணியின் பிளேயிங் 11 பின்வரும்மாறு 1, டீன் எல்கார், 2, ஏய்டன் மார்க்ரம், 3,பீட்டர்சன், 4,வென் டர் டூசன், 5,பவுமா, 6,குயின்டன் டி காக், 7,வியான் முல்டர், 8.கேஷப் மகராஜ், 9,ரபாடா, 10, லுங்கி நிகிடி, 11, ஆலிவியர். இந்தப் போட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1, ஸ்டார் போர்ட்ஸ் தமிழ் மற்றும் டிஸ்னி ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பு செய்யப்படும்

Story first published: Monday, December 27, 2021, 9:14 [IST]
Other articles published on Dec 27, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+