Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட்.. இந்திய அணியிலிருந்து ஸ்டார் வீரர் விடுவிப்பு.. காரணம்?

கொல்கத்தா: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வரும் வெள்ளிக்கிழமை கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டிக்கான இந்திய அணி வீரர்கள் தீவிரமாக பயிற்சி செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் இந்திய அணியில் உள்ள ஆல்ரவுண்டர் நிதிஷ்குமார் முதல் டெஸ்ட் போட்டிக்கான அணியில் இருந்து விடுவிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்திய அணியில் துருவ் ஜூரல், இடம்பெறப் போவதால் நிதிஷ் குமாருக்கு இடம் கிடைக்காத சூழல் ஏற்பட்டிருக்கிறது.

Nitish Kumar reddy

இதன் மூலம் சாய் சுதர்சன் மூன்றாவது இடத்தில் நீடிப்பது உறுதியாக இருக்கிறது. விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆக ரிஷப் பன்ட் களமிறங்கி உள்ளதால் வெறும் பேட்ஸ்மேன் ஆக துருவ் ஜூரல் விளையாடப் போகிறார். இந்த நிலையில் நவம்பர் 13ஆம் தேதி நாளை ராஜ்கோட்டில் இந்தியா ஏ, அணி தென்னாப்பிரிக்கா ஏ அணிக்கு எதிராக ஒரு நாள் தொடரில் விளையாட உள்ளது.

இந்த போட்டியில் நிதிஷ்குமார் ரெட்டி கலந்து கொள்ள போகிறார். இதற்கு ஏதுவாக முதல் டெஸ்ட் போட்டியிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டிருக்கிறார். ஏற்கனவே அந்த அணியில் கேப்டனாக திலக் வர்மா துணை கேப்டனாக ருதுராஜ் அதிரடி வீரர் அபிஷேக் ஷர்மா, ஆர்ஸ்தீப் சிங் கலீல் அகமத், ஹர்ஷித்ரானா, இஷான் கிஷன், ரியான் பராக், பிரசித் கிருஷ்ணா போன்ற ஸ்டார் வீரர்கள் உள்ளனர்.

தற்போது, அதில் நிதிஷ்குமார் ரெட்டியும் இணைந்து இருக்கிறார். நிதீஷ் குமார் ரெட்டி ஆல்ரவுண்டராக இந்திய டெஸ்ட் அணியில் முக்கிய இடம் பிடித்திருந்த நிலையில் அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரின் போது அவருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் டி20 போட்டிகளில் அவர் பங்கேற்கவில்லை. இது குறித்து அப்டேட் அளித்துள்ள இந்திய அணியின் துணை பயிற்சியாளர் ரியான் டென் டோசேட், நிதீஷ் குமார் முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்க வாய்ப்பு இல்லை. அதற்கான கால சூழல் தற்போது இல்லை என்று கூறியிருக்கிறார்.

Story first published: Wednesday, November 12, 2025, 18:36 [IST]
Other articles published on Nov 12, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+