Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக ஆடுகளம் மாறியது எப்படி? என்ன நடந்தது?

செஞ்சூரியன்: இந்தியா, தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

தென்னாப்பிரிக்க அணிக்கு 305 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நிர்ணயித்தது இந்திய அணி

இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் பேட் செய்த போது 9 விக்கெட்டுக்ள் 44 ஓவர்களில் விழுந்தது.

2 விக்கெட்டுகள்

2 விக்கெட்டுகள்

இதனால் ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்ததால் இந்திய அணி வீரர்களும் மளமளவென விக்கெட்டுகளை வீழ்த்துவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தென்னாப்பிரிக்க அணி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறது. குறிப்பாக 36வது ஓவர் முடிவில் தென்னாப்பிரிக்க அணி 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 74 ரன்கள் எடுத்து இருந்தது.

ரோலரின் பங்கு

ரோலரின் பங்கு

இந்திய வீரர்கள் பேட்டிங் செய்யும் போது கடினமாக இருந்த ஆடுகளம் தற்போது எப்படி மாறியது என்று ரசிகர்கள் குழம்பினர். அதற்கு காரணம் இது தான். ஒவ்வொரு இன்னிங்ஸ் முடிந்தவுடனும், பேட்டிங் செய்ய உள்ள அணியிடம் எந்த ரோலரை ( பிட்சை சமம்படுத்த பயன்படும் இயந்திரம்) பயன்படுத்தலாம் என்று கேட்கப்படும்.அதற்கு கேப்டன்கள் சூழலுக்கு தகுந்தால் போல்பெரிய ரோலர், சின்ன ரோலரை தேர்வு செய்வார்கள்

பெரிய ரோலர்

பெரிய ரோலர்

பெரிய ரோலரை பயன்படுத்தினால், ஆடுகளம் நன்கு சமமமாக (Hard) மாறும். சின்ன ரோலர் ஆடுகளத்தை கொஞ்சம் Soft ஆக மாற்றும். ஆடுகளம் Hard ஆக இருந்தால் சில சமயம் பேட்டிங்கிற்கு சாதகமாக செயல்படும். சில சமயம் பந்து நன்காக பவுன்சாகும். பந்து வேகமாக பேட்டிற்கு வந்தால், அது பேட்ஸ்மேன்கள் ரன் குவிக்க வாய்ப்பாக அமையும்.

எல்கார் முடிவு

எல்கார் முடிவு

இதனால் தென்னாப்பிரிக்க கேப்டன் டின் எல்கார் பெரிய ரோலரை பயன்படுத்தினார். ஆடுகளம் சில இடங்களில் Crack இருந்தது. இது பேட்ஸ்மேன்களுக்கு கடும் நெருக்கடியை தரும். இதனால் ஆடுகளத்தை சமமாக ஹார்டாக மாற்ற அவர் பெரிய ரோலரை பயன்படுத்தினார்

ஈரப்பதம்

ஈரப்பதம்

மேலும் சூரியனும் நேரடியாக ஆடுகளத்தில் பட, அதில் இருந்த ஈரப்பதம் முற்றிலுமாக காய்ந்துவிடும். இதனால், வேகப்பந்தவீச்சுக்கு சற்று தொய்வு ஏற்படலாம். ஆனால் இத்தகைய நேரத்தில் தான் சுழற்பந்துவீச்சாளர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்த சரியான நேரம். இதனால் அஸ்வினின் பங்கு 2வது இன்னிங்சில் மிகவும் முக்கியம்.

Story first published: Wednesday, December 29, 2021, 23:20 [IST]
Other articles published on Dec 29, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+