For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

24 வயதில் தோனியின் சாதனையை முறியடித்த ரிஷப் பண்ட்.. “தல”யின் மற்ற சாதனைகளுக்கும் ஆபத்து

செஞ்சூரியன்: இந்திய கிரிக்கெட் அணியில் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்மேனாகவும் செயல்படும் வீரர்கள் ஒரு சிலரே..

Recommended Video

Pant Beats Dhoni! Elite List Of Indian Wicketkeepers In Test | OneIndia Tami

ஃபரூக் இன்ஜினியர், தோனி, ரிஷப் பண்ட் என மூன்று வீரர்களே, விக்கெட் கீப்பிங் செய்தும் நட்சத்திர அந்தஸ்தை பெற்றவர்கள்

இதில் தோனி, விக்கெட் கீப்பராக பல சாதனைகளை படைத்துள்ளார். ஆனால் தற்போது அவரது சாதனைக்கு ரிஷப் பண்டால் ஆபத்து வர உள்ளது.

மின்னல் தோனி

மின்னல் தோனி

தோனி தனது பேட்டிங் திறமைக்கும், ஹெலிகாப்டர் ஷாட்க்கும் எந்த அளவு பிரபலமோ, அதே அளவு அவரது விக்கெட் கீப்பங் திறமைக்கும் பிரபலம். பேட்ஸ்மேன் தனது கோட்டை விட்டு வெளியே சென்று பந்து தோனியிடம் சென்றாலே அவர் அப்படியே பெவிலியனுக்கு சென்று விட வேண்டியது தான். ஏனென்றால் தோனியின் கைகள் மின்னல் வேகத்தில் ஸ்டம்பை பதம் பார்த்துவிடும். அப்படிபட்ட தோனியின் சாதனைகளை முறியடிப்பது அவ்வளவு சுலபம் அல்ல.

ரிஷப் பண்ட் சாதனை

ரிஷப் பண்ட் சாதனை

சர்வதேச கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பராக அதிக டிஸ்மிசலை செய்தவர்கள் பட்டியலில் தோனி மூன்றாவது இடத்தில் உள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் தோனி 90 டெஸ்ட்களில் விளையாடி 294 முறை பேட்ஸ்மேன்களை ஆட்டமிழக்க செய்துள்ளார். மேலும் அதிவேகமாக 100 டிஸ்மிசலை செய்த இந்திய விக்கெட் கீப்பர் என்ற பெருமையை அவர் பெற்று இருந்தார்.

24 வயதில் அபாரம்

24 வயதில் அபாரம்

தற்போது தோனியின் இந்த சாதனையை ரிஷப் பண்ட் தகர்த்துள்ளார். 24 வயதான ரிஷப் பண்ட், தனது 26 வது டெஸ்ட் போட்டியிலேயே 100 டிஸ்மிசலை செய்துள்ளார். இதனால் ரிஷப் பண்ட் அதிக டிஸ்மிசலை செய்த விக்கெட் கீப்பர் என்ற உலக சாதனை படைக்கும் வாய்ப்பு கூட பண்ட்க்கு உள்ளது

உச்சத்தில் தோனி

உச்சத்தில் தோனி

ஆனால் ஒருநாள் கிரிக்கெட் தோனி 444 டிஸ்மிசலை செய்துள்ளார். இதனை முறியடிக்க ரிஷப் பண்ட்க்கு பெரும் சவலாக இருக்கும். ஏனென்றால் இன்னும் ரிஷப் 50 டிஸ்மிசலை கூட ஒருநாள் போட்டியில் செய்யவில்லை. தோனியை போலவே தாமும் சிறந்த வீரராக ஆக வேண்டும் என்ற தனது பாதையில் முதல் வெற்றியை ரிஷப் பண்ட் பெற்றுள்ளார்

Story first published: Tuesday, December 28, 2021, 21:09 [IST]
Other articles published on Dec 28, 2021
English summary
Ind vs SA 1st Test Rishabh Pant Breaks Dhoni Record in Tamil24 வயதில் தோனியின் சாதனையை முறியடித்த ரிஷப் பண்ட்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+