Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கோலியின் மானத்தை காப்பாற்றிய பந்துவீச்சாளர்கள்..!! படுத்தது தென்னாப்பிரிக்கா..!! முகமது ஷமி அபாரம்..

சென்சூரியன்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

சென்சூரியன் மைதானத்தில் இந்தியா இதுவரை வெற்றி பெற்றதே இல்லை.ஆனால் தென்னாப்பிரிக்க அணியில் பலம் வாய்ந்த வீரர்கள் இல்லை.

இதனால் இந்திய அணி, தங்களது சிறப்பான ஆட்டத்தால் தென்னாப்பிரிக்காவுக்கு பதிலடி தந்தனர்.

327 ரன்களுக்கு ஆல் அவுட்

327 ரன்களுக்கு ஆல் அவுட்

2வது நாள் ஆட்டம் மழையால் கைவிடப்பட்ட நிலையில், இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 272 ரன்கள் என்ற ஸ்கோருடன் மூன்றாவது நாள் ஆட்டத்தை தொடர்ந்தது. தென்னாப்பிரிக்க பந்துவீச்சாளர்கள் துல்லியமாக பந்துவீச இந்திய அணி மேலும் 55 ரன்கள் சேர்ப்பதற்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் இந்திய அணி முதல் இன்னிங்சில் 327 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

பும்ரா அபாரம்

பும்ரா அபாரம்

சிறப்பான பந்துவீச்சு மூலம் தென்னாப்பிரிக்க அணி ஆட்டத்தை தங்களது கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்தது . இதனையடுத்து தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க வீரர்கள் களமிறங்கினர். கேப்டன் எல்கார் 1 ரன்னில் எடுத்திருந்த நிலையில் பும்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனைத் தொடர்ந்து முகமது ஷமி, அனல் பறக்க பந்துவீசினார்.சிறப்பான பந்துவீச்சு மூலம் தென்னாப்பிரிக்க அணி ஆட்டத்தை தங்களது கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்தது . இதனையடுத்து தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க வீரர்கள் களமிறங்கினர். கேப்டன் எல்கார் 1 ரன்னில் எடுத்திருந்த நிலையில் பும்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இதனைத் தொடர்ந்து முகமது ஷமி, அனல் பறக்க பந்துவீசினார்.

முகமது ஷமி பிளான்

முகமது ஷமி பிளான்

குறிப்பாக ஏய்டன் மார்க்கரத்திற்கு ஷாட் பால் வீசி திணறடித்தார் ஷமி. இதனால் அடுத்த பந்தும் ஷாட் பாலாக இருக்கும் என மார்க்ரம் எதிர்பார்க்க, ஷமி ஸ்டம்புகளை குறிவைத்து அவுட்டாக்கினார்.இதே போன்று பீட்டர்சனையும் ஷமி பெவிலியனுக்கு அனுப்பினார். வென்டர் டுசனை 3 ரன்களில் சிராஜ் ஆட்டமிழக்க வைத்தார். இதனால் தென்னாப்பிரிக்க அணி 32 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

Recommended Video

KL Rahulன் SENA சாதனை! South Africaவுக்கு எதிரான அசத்தல் Century | IND vs SA | OneIndia Tamil
போராடும் தெ.ஆப்பிரிக்கா

போராடும் தெ.ஆப்பிரிக்கா

தற்போது தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன்கள் சரிவில் இருக்கும் அணியை மீட்க போராடி வருகின்றனர். முதல் இன்னிங்சில் எந்த அணி முன்னிலை பெறுகிறதோ , அந்த அணிக்கே வெற்றி பிரகாசமாக இருக்கும். தற்போதைய சூழலில் இந்தியாவின் கையே ஓங்கி உள்ளது. முதல் நாளில் 90 ஓவர்களில் 3 விக்கெட் மட்டுமே இழந்த நிலையில், 3வது நாளில் 34 ஓவர்களிலேயே 11 விக்கெட்டுகள் வீழ்ந்துள்ளது. இதற்க மைதனத்தில் இருக்கும் ஈரப்பதமே காரணம் என்று கருதப்படுகிறது.

Story first published: Tuesday, December 28, 2021, 22:07 [IST]
Other articles published on Dec 28, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+