For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IND vs SA Test : பிட்ச்சை குறை சொல்ற வேலை வேணாம் உண்மை என்னன்னா.. சுனில் கவாஸ்கர் அதிரடி

செஞ்சுரியன் : இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்க்ஸில் இந்திய பேட்டிங் வரிசை மோசமாக சொதப்பியது. கே எல் ராகுல் மட்டுமே கை கொடுத்து அரைசதம் அடித்தார்.

இந்த நிலையில், முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் அணித் தேர்விலேயே இந்திய அணி சொதப்பி இருப்பதை சுட்டிக் காட்டினார். ஐந்து வருடத்திற்கு முன் தென்னாப்பிரிக்காவில் நடந்த டெஸ்ட் தொடரிலும் பிட்ச் மோசமாக இருப்பதாக கூறினார்கள். ஆனால், அஜின்க்யா ரஹானே சிறப்பாக ஆடி வித்தியாசத்தை காட்டினார். என ரஹானே டெஸ்ட் அணியில் இருந்து நீக்கப்பட்டு இருப்பதை சுட்டிக் காட்டினார்.

IND vs SA 1st Test : Sunil Gavaskar points out India lacks Ajinkya Rahane experience

தற்போது முதல் டெஸ்ட் போட்டி நடந்து வரும் செஞ்சுரியன் ஆடுகளம் பேட்டிங் செய்ய கடினமாக இருப்பதாக கூறப்படுகிறது. அதன் காரணமாகவே இந்திய அணியின் ஐந்து முக்கிய பேட்ஸ்மேன்கள் இந்திய அணி 107 ரன்கள் சேர்த்த நிலையில் தங்கள் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினர். கோலி 38, ஸ்ரேயாஸ் ஐயர் 31 ரன்கள் எடுத்ததே முதல் ஐந்து பேட்ஸ்மேன்களில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ரன்கள்.

அதன் பின் கே எல் ராகுல் 70 ரன்கள் சேர்த்ததால் இந்திய அணி 59 ஓவர்களில் 8 விக்கெட் இழந்து 208 ரன்கள் சேர்த்தது. இந்த நிலையில், ஐந்து வருடம் முன்பு நடந்த தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடரிலும் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி இதே போல ஆடியதாகவும், அப்போது ரஹானேவை களமிறக்காமல் இருந்த நிலையில், மூன்றாவது டெஸ்ட்டில் அவர் ஆடிய போது கடினமான பிட்ச் என கூறப்பட்ட ஜோஹன்னஸ்பெர்க் பிட்ச்சில் அவர் சிறப்பாக ஆடி ரன் குவித்ததாகவும் கூறினார் சுனில் கவாஸ்கர்.

தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் அஜின்க்யா ரஹானேவை இடம் பெறவில்லை. அவரை டெஸ்ட் அணியில் இருந்து நீக்கி இருந்தது பிசிசிஐ. ஆனால், இது போன்ற வங்கதேசம் வெளிநாட்டு சூழ்நிலைகளில் சிறப்பாக ஆடும் அனுபவம் கொண்டவர் அஜின்க்யா ரஹானே என சுட்டிக் காட்டினார் சுனில் கவாஸ்கர்.

Story first published: Wednesday, December 27, 2023, 8:28 [IST]
Other articles published on Dec 27, 2023
English summary
IND vs SA 1st Test : Sunil Gavaskar points out India lacks Ajinkya Rahane experience
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+