Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இன்று போய் நாளை வா..!! ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்த விராட் கோலி,,!!

சென்சூரியன் : விராட் கோலியை ரசிகர்கள், ரன் மிஷின் என்று அன்புடன் அழைப்பார்கள். இதே போன்று சதம் விளாசுவதை டீ குடிப்பது போன்று ஒரு பழக்கமாக கோலி கடைபிடித்து வந்தார்.

யாராலும் தொட முடியாது என்று நினைக்கும் சச்சினின் 100 சர்வதேச சதம் மற்றும் அதிக ரன்கள் என்ற சாதனையை விராட் கோலி கொஞ்சம் அசைத்து பார்த்தார்.

இப்படி பல சாதனைகளை படைத்து வந்த விராட் கோலி
மீது யார் கண் பட்டதோ என்று தெரியவில்லை. கடைசியாக சதம் விளாசி 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது.

பாதளத்தில் சராசரி

பாதளத்தில் சராசரி

இதுவரை சர்வதேச கிரிக்கெட்டில் 70 சதம் அடித்துள்ள விராட் கோலி, 71வது சதத்தை எப்போது அடிப்பார் என்று அவரது ரசிகர்கள் காத்துள்ளனர், சமீப காலமாக ஃபார்ம் அவுட்டான விராட் கோலியின் டெஸ்ட் சராசரி அகல பாதளத்திற்கு சென்றது. 2017 ஆம் ஆண்டில் 75 ஆக இருந்த சராசரி,2020ஆம் ஆண்டில் 19 ஆகவும், 2021ஆம் ஆண்டில் 29 ஆகவும் சரிந்துள்ளது.

ஏமாற்றம்

ஏமாற்றம்

கடைசியாக நியூசிலாந்துக்கு எதிரான மும்பை டெஸ்டில் கூட டக் அவுட் மற்றும் 36 ரன்களில் ஆட்டமிழந்தார். ஏற்கனவே 2020ஆம் ஆண்டில் சதம் அடிக்காத கோலி, நடப்பாண்டிலும் சதம் அடிக்கவில்லை. இதனால் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில் சதம் விளாசி ரசிகர்களின் குறையை போக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது.

35 ரன்கள்

35 ரன்கள்

அதற்கு ஏற்றார் போல் ஹாட்ரிக் விக்கெட் பந்துக்கு களமிறங்கிய கோலி, பொறுமையாக விளையாடி ரன்களை சேர்த்தார். அவரது டிரெட் மார்க் கவர் டிரைவ் ஆடி பவுண்டரி விளாசினார். இதனால் 71வது சதம் இன்று வந்துவிடும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், 35 ரன்களில் தேவையில்லாத ஷாட் ஆடி ஆட்டமிழந்தார்.

2 ஆண்டுகள் காத்திருப்பு

2 ஆண்டுகள் காத்திருப்பு

இன்னும் விராட் கோலிக்கு நடப்பாண்டில் சதம் விளாச ஒரு வாய்ப்பு மட்டுமே உள்ளது. இரண்டாவது இன்னிங்சிலும் அவர் சதம் அடிக்கவில்லை என்றால், தொடர்ந்து 2 ஆண்டுகளாக சதம் அடிக்கவில்லை என்ற சோகமான சாதனை அவருக்கு சொந்தமாகிவிடும்.

Story first published: Monday, December 27, 2021, 0:17 [IST]
Other articles published on Dec 27, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+