கோலிக்கு கடைசி வாய்ப்பும் போச்சு..!! இனி அடுத்த வருசம் தான்..!! என்னதான் ஆச்சு..?
சென்சூரியன் : விராட் கோலியை கிங் என்றே அவரது ரசிகர்கள் அழைப்பார்கள் காரணம், ஒரு அரசன் போல் போட்டியில் ஆதிக்கம் செலுத்த கூடியவர்..
இதே போன்று சதம் விளாசுவதை டீ குடிப்பது போன்று ஒரு பழக்கமாக கோலி கடைபிடித்து வந்தார்.
இப்படி பல சாதனைகளை படைத்து வந்த விராட் கோலி
மீது யார் கண் பட்டதோ என்று தெரியவில்லை. கடைசியாக சதம் விளாசி 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது.

பாதாளத்தில் சராசரி
இதுவரை சர்வதேச கிரிக்கெட்டில் 70 சதம் அடித்துள்ள விராட் கோலி, 71வது சதத்தை எப்போது அடிப்பார் என்று அவரது ரசிகர்கள் காத்துள்ளனர், சமீப காலமாக ஃபார்ம் அவுட்டான விராட் கோலியின் டெஸ்ட் சராசரி அகல பாதாளத்திற்கு சென்றது. 2017 ஆம் ஆண்டில் 75 ஆக இருந்த சராசரி,2020ஆம் ஆண்டில் 19 ஆகவும், 2021ஆம் ஆண்டில் 29 ஆகவும் சரிந்துள்ளது.

ஏமாற்றம்
கடைசியாக நியூசிலாந்துக்கு எதிரான மும்பை டெஸ்டில் கூட டக் அவுட் மற்றும் 36 ரன்களில் ஆட்டமிழந்தார். ஏற்கனவே 2020ஆம் ஆண்டில் சதம் அடிக்காத கோலி, நடப்பாண்டிலும் சதம் அடிக்கவில்லை. இதனால் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில் சதம் விளாசி ரசிகர்களின் குறையை போக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது.

35 ரன்கள்
அதற்கு ஏற்றார் போல் முதல் இன்னிங்சில் ஹாட்ரிக் விக்கெட் பந்துக்கு களமிறங்கிய கோலி, பொறுமையாக விளையாடி ரன்களை சேர்த்தார். அவரது டிரெட் மார்க் கவர் டிரைவ் ஆடி பவுண்டரி விளாசினார். இதனால் 71வது சதம் ஞாயிறன்று வந்துவிடும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், 35 ரன்களில் தேவையில்லாத ஷாட் ஆடி ஆட்டமிழந்தார்.

2 ஆண்டுகள் காத்திருப்பு
நடப்பாண்டில் விராட் கோலியின் கடைசி வாய்ப்பாக 2வது இன்னிங்சில் கோலி இன்று களமிறங்கினார். இதில் 4 பவுண்டரிகளை கோலி விரட்டினார். ஆனால் எதிர்பாராதவிதமாக 18 ரன்களில் கோலி ஆட்டமிழந்தார். இதன் மூலம் தொடர்ந்து 2 ஆண்டுகள் அவர் ஒரு சதம் கூட விளாசவில்லை. விராட் கோலியை ஆட்டமிழக்க செய்த மார்கோ ஜென்சன், 3 ஆண்டுகளுக்கு முன்பு கோலிக்கு இளம் வீரராக வலைப் பயிற்சியில் பந்துவீசியவர் என்பது குறிப்பிடத்தக்கது


Click it and Unblock the Notifications