இந்தியாவின் வெற்றியை பதம் பார்க்குமா மழை? செஞ்சூரியன் வானிலை அறிக்கை..

செஞ்சூரியன்: இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 327 ரன்களும், தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 197 ரன்களும் எடுத்தன.

130 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில், தற்போது இந்திய அணியின் வெற்றி பிரகாசமாகியுள்ளது.

இன்றைய ஆட்டமும், நாளைய ஆட்டமும் எஞ்சிய நிலையில், இந்தியா இரணடாவது இன்னிங்சில் 200 ரன்களுக்கு மேல் அடிக்கும் பட்சத்தில் இந்தியாவின் வெற்றி உறுதியாகிவிடும். இந்த நிலையில், இந்தியாவின் வெற்றியை மழை பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எப்போது தான் திருந்துவார் கோலி..!! தொடரும் தவறான முடிவுகளால் சறுக்கும் இந்தியா..!!எப்போது தான் திருந்துவார் கோலி..!! தொடரும் தவறான முடிவுகளால் சறுக்கும் இந்தியா..!!

தற்போது 4வது நாள் ஆட்டம் மதியம் அல்லது மாலை நேரத்தில் மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இப்படி மழை பெய்தால், ஆட்டம் பாதிக்கப்பட்டு, தென்னாப்பிரிக்காவின் 10 விக்கெட்டுகளை எடுக்க போதிய நேரம் இல்லாமல் போய்விடும்.

India ODI squad: shahrukh khan likely to be rewarded; team selection delayed further

இந்த நிலையில், 5வது நாள் ஆட்டத்திலும் மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் 2வது நாள் போல் 5வது நாளும் மழையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இதனால் முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடையவே வாய்ப்பு உள்ளது.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Ind vs SA 1st Test Weather report Day 4 இந்தியாவின் வெற்றியை பதம் பார்க்குமா மழை? செஞ்சூரியன் வானிலை அறிக்கை..
Story first published: Wednesday, December 29, 2021, 13:59 [IST]
Other articles published on Dec 29, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X