IND vs SA 2வது டெஸ்ட் -இந்தியாவின் பிளேயிங் லெவன் என்ன? 2 பேர் அறிமுகமாக வாய்ப்பு
கேப்டவுன் : இந்தியா தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை புதன்கிழமை மதியம் 2 மணிக்கு தொடங்குகிறது. இந்த போட்டி கேப்டவுன் மைதானத்தில் நடைபெறுகிறது.
முதல் டெஸ்டில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியதால் இந்த ஆட்டத்தில் இந்திய அணி பதிலடி கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இந்த நிலையில் முதல் டெஸ்டில் சொதப்பிய பவுலர்கள் இரண்டாவது டெஸ்டில் அதிரடியாக நீக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. முதலில் இரண்டாவது டெஸ்டில் களமிறங்க போகும் இந்திய வீரர்கள் குறித்து தற்போது பார்க்கலாம். தொடக்க வீரராக ரோகித் சர்மா மற்றும் ஜெய்ஸ்வால் எப்போதும் போல் களமிறங்குகிறார்கள். நம்பர் மூன்றாவது இடத்தில் கில் விளையாடுவாரா இல்லை அபிமன்யூ ஈஸ்வரனுக்கு வாய்ப்பு வழங்கப்படுமா என்பதில் சந்தேகம் நிலவுகிறது.
அபிமன்யூ ஈஸ்வரன் வந்தால் கில் ஸ்ரேயாஸ் இடத்தில் விளையாடுவார். 4வது இடத்திலும் விராட் கோலி, 5வது இடத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் விளையாடுகிறார்கள். ஆறாவது இடத்தில் கே எல் ராகுல் விக்கெட் கீப்பராக களம் இறங்குவார். ஏழாவது இடத்தில் ஆல்ரவுண்டர் ஜடேஜாவும், எட்டாவது இடத்தில் பும்ரா, ஒன்பதாவது இடத்தில் சிராஜ் பத்தாவது இடத்தில் அறிமுக வீரராக ஆவேஷ் கான் களமிறங்க வாய்ப்பு உள்ளது.
11வது வீரராக பிரசித் கிருஷ்ணா அல்லது முகேஷ் குமார் களமிறங்க கூடும். ஒருவேளை இந்திய அணி தங்களுடைய பேட்டிங் பலத்தை அதிகரிக்க வேண்டும் என நினைத்தால், ஏற்கனவே சொன்னது போல் அபிமன்யு ஈஸ்வரனையும் ஸ்ரேயாஸ் ஐயரையும் களமிறக்கி பேட்டிங்கில் எட்டு வீரர்கள் இருப்பது போல் அணியை கட்டமைத்துக் கொள்வார்கள்.


Click it and Unblock the Notifications