Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தென்னாப்பிரிக்காவின் காமெடி ஃபில்டிங்..!! கே.எல்.ராகுல், ரிஷப் பண்ட்க்கு இதைவிட வாய்ப்பு கிடைக்காது

பார்ல்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது.

3 போட்டிகள் கொண்ட தொடரில் தென்னாப்பிரிக்க அணிக்கு 1க்கு0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதனால் வாழ்வா சாவா கட்டத்தில் இந்திய அணி யில் உள்ளது.

தொடக்க விக்கெட்டுக்கு கே.எல்.ராகுல், ஷிகர் தவான் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 63 ரன்கள் சேர்த்தது

ஏமாற்றம்

ஏமாற்றம்

ஷிகர் தவான் 29 ரன்களில் ஆட்டமிழக்க, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி டக் அவுட்டானார். இதனால் இந்திய அணி 64 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனையடுத்து கேப்டன் கே.எல்.ராகுலுடன், ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்தார்

காமெடி ஃபில்டிங்

காமெடி ஃபில்டிங்

இந்தியாவின் மானம் இந்த ஜோடி கையில் இருந்த நிலையில், 15வது ஓவரில் பெரிய கண்டத்திலிருந்து இருவரும் தப்பினர். கேஷவ் மகராஜ் வீசிய 15வது ஓவரின் கடைசி பந்தில் ரிஷப் பண்ட் அடித்த ஷாட் நேரடியாக தென்னாப்பிரிக்க வீரரின் கையில் சிக்கியது

தப்பித்த ராகுல்

தப்பித்த ராகுல்

இதனை சரியாக பார்க்காத கே.எல்.ராகுல் பாதி தூரம் ஓடி வந்துவிட்டார். ஆனால் பந்து வீரரின் கையில் சிக்கியதை பார்த்த ரிஷப் பண்ட் ரன் ஓடாமல் தனது இடத்திற்கு மீண்டும் வந்துவிட, ராகுல் என்ன செய்வது என்று தெரியாமல் ரிஷப் பண்ட் நின்ற இடத்திற்கே ராகுலும் வந்துவிட்டார். இப்படி ஒரே முனையில் இரண்டு வீரர்களும் நின்றனர்

செம வாய்ப்பு

செம வாய்ப்பு

இதனையடுத்து சுலபமான ரன் அவுட் என்ற தென்னாப்பிரிக்க ரசிகர்கள் நினைத்த போது ஃபில்டர் எறிந்த பந்தை கேஷவ் மகராஜ் தவறவிட, அவருக்கு பின்னால் நின்ற வீரரும் பந்தை பிடிக்காமல் விட்டார். இந்த நேரத்தை பயன்படுத்தி கொண்ட ராகுல், மீண்டும் மறுமுனைக்கு ஓடி வந்துவிட்டார். இதனால் இருவரும் ரன் அவுட் ஆகாமல் தப்பித்தனர்.

Story first published: Friday, January 21, 2022, 16:46 [IST]
Other articles published on Jan 21, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+