Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வாழ்வா? சாவா? ஆட்டத்தில் இந்தியா நடுக்கம்..!! ரசிகர்களை ஏமாற்றிய விராட் கோலி..!!

பார்ல்: இந்தியா, தென்னாப்பிரிக்க அணிக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டியில் பார்ல் நகரில் நடைபெற்று வருகிறது.

முதல் போட்டியில் இந்தியா தோல்வியை தழுவியதால், 2வது ஆட்டத்தில் இந்தியா வென்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது.

இதில் டாஸ் வென்ற கேப்டன் கே.எல்.ராகுல், பேட்டிங் செய்வதாக அறிவித்தார். ரன் குவிப்புக்கு சாதகமான மைதானம் என்பதால் இந்தியா பெரிய இலக்கை நிர்ணயிக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது.

ஏன் பேட்டிங்

ஏன் பேட்டிங்

முதல் ஒருநாள் போட்டியில் பயன்படுத்திய அதே ஆடுகளம் தான் இன்றைய ஆட்டத்திலும் பயன்படுத்துகிறது. இதனால் ஏற்கனவே 100 ஓவர்கள் அந்த ஆடுகளத்தில் வீசப்பட்டதால் , ஆடுகளத்தின் வேகம் குறைந்து காணப்படும். இந்த நிலையில், இன்றைய ஆட்டத்தில் 2வது இன்னிங்ஸ் ஆடும் அணிக்கு பேட்டிங் கொஞ்சம் கடினமாக இருக்கும்.

மேலும் ஒரு வாய்ப்பு

மேலும் ஒரு வாய்ப்பு

இன்றைய போட்டியில் இந்திய அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. இதனால் ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் ஐயர், வெங்கடேஷ் ஐயருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த நிலையில், ஆட்டம் தொடங்கியதும் இந்திய அணி வீரர்கள் எவ்வித நெருக்கடியும் இல்லாமல் ரன் சேர்த்து வந்தனர்.

தவான் அவுட்

தவான் அவுட்

சிங்கிள்ஸ், பவுண்டரி என ரன்களை ராகுல் மற்றும் தவானும் அடித்து வந்தனர். குறிப்பாக ஷிகர் தவான் 29 ரன்களில் 5 பவுண்டரிகளை விளாசினார். இதனையடுத்து பெரிய ஷாட் ஆட முயன்ற தவான் பவுண்டரி லைனில் கேட்ச் ஆனார். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 63 ரன்கள் சேர்த்தது.

கோலி டக் அவுட்

கோலி டக் அவுட்

இதனையடுத்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி களமிறங்கினார். விராட் இன்று ரன் குவிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 100 ரன்கள் எஞ்சிய நிலையில் தனது 71 சதத்தை தவறவிட்டார் கோலி. ஆம் டக் அவுட்டாகி வெளியேறினர். தென்னாப்பிரிக்க சுழற்பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ள முடியாமல் இந்தியா திணறி வருகிறது.

Story first published: Friday, January 21, 2022, 17:16 [IST]
Other articles published on Jan 21, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+