Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs SA - 2வது டி20 போட்டியில் அக்சர் பட்டேல் நீக்கப்பட வாய்ப்பு? அதிரடி ஆல்ரவுண்டர் அறிமுகம்

கெபேஹா : இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி இன்று மாலை இந்திய நேரப்படி ஏழு முப்பது மணிக்கு கெபேஹா நகரில் நடைபெற உள்ளது. முதல் டி20 போட்டியில் இந்திய அணி அபாரமாக வென்ற நிலையில், இரண்டாவது டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்கா பதிலடி கொடுக்க வேண்டிய உத்வேகத்தில் இருக்கிறது.

தற்போது இந்திய அணி தொடர்ந்து 11 சர்வதேச டி20 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இன்றைய ஆட்டத்தை இந்தியா வென்றால் இதுவரை அதிகபட்சமாக 12 முறை தொடர்ந்து வெற்றியைப் பெற்ற தங்களது ரெக்கார்டை தாங்களே இந்தியா எட்டு வாய்ப்பு இருக்கிறது.

ind vs sa suryakumar yadav sanju samson hardik pandya

இந்த நிலையில் பிளேயிங் லெவனில் இன்றைய ஆட்டத்தில் மாற்றம் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. டர்பன் ஆடுகளம் சுழற் பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என எண்ணி இந்திய அணி அக்சர் பட்டேல், ரவி பிஸ்னாய், வருண் சக்கரவர்த்தி என மூன்று சுழற் பந்துவீச்சாளர்களை வைத்து களமிறங்கியது.

ஆனால் கெபேஹா நகரில் உள்ள ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என தெரிகிறது. இதனால் இந்திய அணியில் மூன்று சுழற் பந்துவீச்சாளருக்கு பதில் இரண்டு சுழற் பந்துவீச்சாளர்கள் விளையாட வாய்ப்பு இருக்கிறது. முதல் டி20 போட்டியில் வருண் சக்கரவர்த்தி மற்றும் ரவி பிஸ்னாய் ஆகியோர் அபாரமாக பந்துவீச்சில் செயல்பட்டார்கள். அதேசமயம் அக்சர் பட்டேல் ஒரு ஓவர் மட்டும்தான் வீசினார். பேட்டிங்கிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

இந்த நிலையில் அக்சர் பட்டேல் அதிரடியாக நீக்கப்பட்டு அவருக்கு பதில் அதிரடி இடம் ஆல்ரவுண்டர் ரமந்திப் சிங் விளையாட வாய்ப்பு இருக்கலாம் என தெரிகிறது. இதன் மூலம் கூடுதலாக வேகப் பந்து வீச்சு வாய்ப்பும் பேட்டிங்கில் இறுதியில் அதிரடியாக ஆடக்கூடிய ஒரு வீரரும் இந்தியாவுக்கு இருக்கும். அதே சமயம் பேட்டிங் இந்திய அணி எந்த மாற்றத்தையும் செய்யாது என தெரிகிறது.

அபிஷேக் ஷர்மா திறமை வாய்ந்த வீரராக இருந்தாலும், பெரிய ஸ்கோர் எடுக்க முடியாமல் தடுமாறி வருகிறார். இதனால் இன்றைய ஆட்டத்தில் அவர் பட்டையை கிளப்ப வேண்டும். அதேபோன்று சஞ்சு சம்சன் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஹாட்ரிக் சதம் அடிப்பாரா என்று எதிர்பார்க்கும் ஏற்பட்டுள்ளது.

உத்தேச பிளேயிங் லெவன்: 1. சஞ்சு சாம்சன், 2, அபிஷேக் சர்மா, 3, திலக் வர்மா, 4, சூர்யகுமார் யாதவ், 5, ஹர்திக் பாண்டியா, 6,ரிங்கு சிங், 7, அக்சர் பட்டேல்/ ரமந்தீப் சிங், 8, ரவி பிஸ்னாய், 9,வருண் சக்கரவர்த்தி, 10. ஆர்ஸ்தீப் சிங், 11, ஆவேஷ் கான்

Story first published: Sunday, November 10, 2024, 8:00 [IST]
Other articles published on Nov 10, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+