Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இது அராஜக பேச்சு.. மற்றவர்கள் மீது பழியை போட்டு எஸ்கேப்.. தோல்விக்கான காரணத்தை தேடும் ரிஷப் பண்ட்

கட்டாக்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டி20 போட்டியிலும் இந்திய அணி தோல்வி

Recommended Video

IND vs SA Rishabh pant சொன்ன தோல்விக்கான காரணம் | *Cricket

யை தழுவியது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில், தென்னாப்பிரிக்க அணி முன்னிலை பெற்றுள்ளது.

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் தடுமாறியதால் 148 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதனைத் தொடர்ந்து விளையாடிய தென்னாப்பிரிக்க அணி தொடக்கத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தாலும், கிளாசென் அதிரடியாக ஆடி அணிக்கு வெற்றியை தேடி தந்தார்.

கடினமாக இருந்தது

கடினமாக இருந்தது

வெற்றி குறித்து பேசிய தென்னாப்பிரிக்க கேப்டன் பெவுமா, இது கொஞ்சம் கடினமான செஸிங்காக இருந்தது. இந்திய அணி வீரர்கள் புதிய பந்தை நன்றாக வீசி நெருக்கடி அளித்தார்கள். நான் பொறுமையாக விளையாட முயற்சித்தேன் அதனால் கிளாசென் இறுதியில் வந்த தனது வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். நான் கடைசி வரை நின்று விளையாட வேண்டும் என்று நினைத்தேன்.

பாராட்டு

பாராட்டு

ஆனால், எங்களுக்கு தேவையான முடிவுகள் கிடைத்துவிட்டன. இன்றைய ஆட்டத்தில் சில விசயங்கள் கற்று கொள்ள வாடயப்பு கிடைத்தது. ஆட்டத்தின் பாதியிலேயே செங் கடினமாக இருக்க போகிறது என்று தெரிந்துவிட்டது, அதனால் சில ஓவர்களிலேயே உத்வேகத்தை இழக்க விரும்பவில்லை. எங்களுடைய திட்டத்தை சிறப்பாக நடைமுறைப்படுத்தினோம்.

கிரிக்கெட் வாழ்க்கை தப்பித்தது

கிரிக்கெட் வாழ்க்கை தப்பித்தது

ஆட்டநாயகன் விருது பெற்ற கிளான், இந்தியாவுக்கு எதிராக ரன்களை குவித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. குயின்டன் டி காக், 2 நாட்களுக்கு முன்கே தன்னிடம் காயம் அடைந்திருப்பதை கூறினார். இதனால் மனதளவில் இந்தப் போட்டிக்காக தயாராகினேன். நான் கடந்த 2 ஆண்டுகளாக சரிவர விளையாடவில்லை. இந்த இன்னிங்ஸ் மூலம் என் கிரிக்கெட் வாழ்க்கை கொஞ்சம் நீடிக்கும் என நம்புகிறேன்.

ரிஷப் பண்ட் குறை

ரிஷப் பண்ட் குறை

தோல்வி குறித்து பேசிய கேப்டன் ரிஷப் பண்ட், பேட்டிங்கில் 10,15 ரன்கள் குறைவாக அடித்துவிட்டோம். பந்துவீச்சாளர்கள் முதல் பத்து ஓவரை வர நன்றாக வீசினார்கள். அதன் பிறகு திட்டத்தை அவர்கள் நடைமுறைப்படுத்த தவறிவிட்டார்கள். அடுத்த போட்டியிலாவது சுழற்பந்துவீச்சாளர்கள் சரியாக பந்துவீச வேண்டும். கடைசி 3 போட்டியில் வெற்றி பெற முயற்சிப்போம்.

Story first published: Monday, June 13, 2022, 10:49 [IST]
Other articles published on Jun 13, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+