Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs SA- இந்தியாவுக்கு பாதகமாக விழுந்த டாஸ்.. பிளேயிங் லெவனில் டிவிஸ்ட் வைத்த சூர்யகுமார்

கெப்பேஹா : இந்தியா,தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி இன்று கெப்பேஹா நகரில் தொடங்கியது. இன்றைய ஆட்டத்தில் மழை பெய்ய அதிக வாய்ப்பு இருக்கிறது. அது மட்டுமல்லாமல் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. ஆடுகளத்தில் புற்களும் அதிக அளவில் இருக்கிறது.

இதனால் இந்த ஆடுகளம் வேகபந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும். இந்த நிலையில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வதாக அறிவித்தது. இது இந்தியாவுக்கு பாதகமான முடிவாக பார்க்கப்படுகிறது.

ind vs sa suryakumar yadav hardik pandya


இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள தென்னாப்பிரிக்கா கேப்டன் ஏய்டன் மார்க்கரம் மழை நிச்சயம் குறிக்கிடும் என்பதால் இரண்டாவதாக பேட்டிங் செய்வது முக்கியம். அது மட்டுமில்லாமல் ஆடுகளத்தில் ஈரப்பதம் அதிகமாக இருப்பதால், பந்துவீச்சாளர்கள் அதனை சிறப்பாக பயன்படுத்திக் கொள்வார்கள். இன்றைய ஆட்டத்தில் ரீசா ஹெண்ரிக்ஸ் களமிறங்குகிறார்.

நாங்கள் முடிவை பற்றி யோசிக்காமல் நல்ல கிரிக்கெட்டை விளையாடுவோம் என்று மார்க்கரம் தெரிவித்தார். இதனை தொடர்ந்து பேசிய இந்திய அணி கேப்டன் சூரியகுமார் யாதவ், நாங்கள் முதலில் பேட்டிங் செய்ய தான் நினைத்தோம். இதனால் டாஸ் குறித்து எங்களுக்கு கவலை இல்லை. நாங்கள் எங்களுடைய அதிரடி கிரிக்கெட்டை தான் வெளிப்படுத்த விரும்புகிறோம்.

கடந்த போட்டி எங்களுக்கு சாதகமாக அமைந்தது. அது நிச்சயம் எனக்கு மகிழ்ச்சியை கொடுத்தது. ஒவ்வொரு போட்டியிலும் ஒவ்வொரு விஷயத்தை நாங்கள் கற்றுக் கொள்கின்றோம். நல்ல பழக்க வழக்கங்களை தொடர விரும்புகின்றோம். எங்கள் அணியில் இன்று எந்த மாற்றமும் இல்லை.முதல் டி20 போட்டியில் விளையாடிய வீரர்களே இன்றைய ஆட்டத்திலும் களமிறங்குகிறார்கள் என்று சூரிய குமார் கூறினார்.

மழை மற்றும் ஆடுகளம் ஈரப்பதமாக இருப்பதால் இந்திய அணி மூன்று சுழற் பந்துவீச்சாளர்கள் பதில் இரண்டு சுழற் பந்துவீச்சாளர்களை வைத்து விளையாடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சூரியகுமார் யாதவ் அப்படி எந்த ஒரு மாற்றத்தையும் செய்யாமல் விட்டுவிட்டார். இது நிச்சயம் இந்தியாவுக்கு பாதகத்தை ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் வேகப் பந்துவீச்சுக்கு சாதகமான மைதானத்தில் முதலில் பேட்டிங் செய்ய விரும்பினேன் என்று அவர் கூறியிருப்பதும் ரகசியங்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
Story first published: Sunday, November 10, 2024, 19:18 [IST]
Other articles published on Nov 10, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+