Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியாவின் தோல்விக்கான 5 முக்கிய காரணங்கள்..!! சோதனையுடன் தொடங்கிய புத்தாண்டு

ஜோகனஸ்பர்க்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்டில் இந்திய அணி தோல்வியை தழுவியது. ராசியான மைதானம், தோல்வியே சந்திக்காத மைதானத்தில் இந்தியா தோற்றது ரசிகர்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த ஆண்டு புத்தாண்டு டெஸ்டில் இந்திய அணி சாதனையுடன் தொடங்கியது. ஆனால் இம்முறை சோதனையுடன் தொடங்கியுள்ளது.

இந்தப் போட்டியில் இந்தியா அடைந்த தோல்விக்கு என்ன காரணம் என்பதை தற்போது காணலாம்

கோலி இல்லை

கோலி இல்லை

இந்திய கிரிக்கெட் அணியின் முதுகு எலும்பான கோலிக்கு, முதுகில் தசைப் பிடிப்பு ஏற்பட்டது. இதனால், அவர் போட்டியில் பங்கேற்க முடியவில்லை. கோலி ஃபார்மில் இல்லை என்றாலும், ஜோகனஸ்பர்க் அவர் ராசியான மைதானம். நிச்சயம் ஒரு அரைசதமாவது அடித்திருக்க வாய்ப்புண்டு. பேட்டிங்கில் சொதப்பினாலும், வீரர்கள் சோர்வாக இருக்கும் போது எல்லாம் உற்சாகம் அளித்து, போட்டியின் முடிவையே மாற்றி இருப்பார்.

முகமது சிராஜ் காயம்

முகமது சிராஜ் காயம்

இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ்க்கு போட்டியின் போது ஏற்பட்ட காயம், பெரும் பின்னடைவாக அமைந்தது. விக்கெட் விழாத நேரத்தில் கூட தனது அபாரமான பந்துவீச்சால் விக்கெட்டை எடுக்கும் திறமை சிராஜ்க்கு உண்டு. முழு உடல் தகுதி இல்லாத நிலையில், அவர் இந்த டெஸ்டில் மொத்தமே வெறும் 15 ஓவர்கள் மட்டுமே வீசினார்.

பேட்டிங் குறை

பேட்டிங் குறை

கே.எல்.ராகுலை தவிர, இந்திய அணியின் பேட்டிங் பரிதாபமான நிலையில் உள்ளது. இரண்டாவது இன்னிங்சில் சீனியர் வீரர்கள் புஜாரா, ரஹானே அரைசதம் அடித்து இருந்தாலும், அது போதுமானதாக இல்லை. கோலி இல்லாத நிலையில், இருவரும் பெரிய சதங்களை அடித்து இருக்க வேண்டும். குறிப்பாக முதல் இன்னிங்சில் இருவரும் சொதப்பியதால் இந்தியா வெறும் 202 ரன்கள் மட்டுமே பெற்று இருந்தது. இதுவே தோல்விக்கு முக்கிய காரணம்

ரிஷப் பண்ட்

ரிஷப் பண்ட்

இந்திய அணிக்கு எப்போது எல்லாம் சரிவு ஏற்படுமோ அப்போது எல்லாம் அடித்து ஆடி கரையை சேர்ப்பதில் ரிஷப் பண்ட் வல்லவர். ஆனால் இந்த டெஸ்டில் ரிஷப் பண்ட் 2வது இன்னிங்சில் டக் அவுட்டாகினார். இதனால் இந்தியா பெரிய இலக்கை தென்னாப்பிரிக்காவுக்கு தர முடியாத நிலை ஏற்பட்டது. ரிஷப் பண்ட் எதாவது அடித்து இருந்தால், அது போட்டியின் முடிவில் ஒரு அளவிற்காவது வித்தியாசத்தை ஏற்படுத்தி இருக்கும்

வேகப்பந்துவீச்சு

வேகப்பந்துவீச்சு

2வது இன்னிங்சில் இந்தியாவின் வேகப்பந்தவீச்சாளர் பும்ராவின் பந்துவீச்சு எடுப்படாமல் போனதே தோல்விக்கு காரணம். பும்ரா பேட்டிங் செய்த போது, அவரை தென்னாப்பிரிக்க வீரர்கள் கோபமாக்கினர். இதனால், அவர் யுத்தியுடன் பந்துவீசவில்லை. மேலும் தென்னாப்பிரிக்காவை அச்சுறுத்தும் வகையில் பும்ரா பந்தவீசவில்லை. இதனால் நெருக்கடி இல்லாமல் தென்னாப்பிரிக்க வீரர்கள் ரன் குவித்தனர்.

Story first published: Thursday, January 6, 2022, 23:19 [IST]
Other articles published on Jan 6, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+