Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs SA: ஜெய்ஸ்வால் செய்த தவறான செயல்.. சரமாரியாக திட்டிய கேப்டன் ரிஷப் பண்ட்.. என்ன நடந்தது?

கவுஹாத்தி: இந்திய அணியின் அதிரடி வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஃபீல்டிங்கில் செய்த தவறால் கேப்டன் ரிஷப் பண்ட்டின் கோபத்திற்கு ஆளான சம்பவம் கவுஹாத்தி டெஸ்ட் போட்டியில் நடந்தது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், காயம் காரணமாக விலகிய சுப்மன் கில்லுக்குப் பதிலாக ரிஷப் பண்ட் அணியை வழிநடத்தி வருகிறார்.

தென்னாப்பிரிக்க அணி 400 ரன்களைக் கடந்து வலுவான நிலையில் இருந்ததால், விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டிய நெருக்கடியில் இந்தியா இருந்தது. ஆடுகளத்தில் பந்து நன்றாக எழும்பி (Bounce) மற்றும் திரும்பியதால் விக்கெட் வீழ்த்தும் நோக்கில் ரிஷப் பண்ட், பேட்ஸ்மேனுக்கு மிக அருகில் 'ஷார்ட் லெக்' திசையில் யஷஸ்வி ஜெய்ஸ்வாலை நிற்க வைத்தார்.

IND vs SA 2nd Test Captain Rishabh Pant Blasts Yashasvi Jaiswal Over Poor Fielding Stance

ஆனால், ஜெய்ஸ்வால் நின்ற விதம் பந்துக்குத் தயாராக இருப்பது போல் தெரியவில்லை. பந்து வரும்போது அவர் கைகளை விரித்துத் தயாராக இல்லாமல், கால்களை மட்டும் அகலமாக விரித்து நின்றதாக ரிஷப் பண்ட் கடும் விரக்தியடைந்தார்.

மைதானத்திலிருந்தவாறே ஜெய்ஸ்வாலை நோக்கி, "கைகளை விரித்துத் தயாராக இரு... கால்களை மட்டும் விரித்து நின்றால் கேட்ச் பிடிக்க முடியாது!" என்று ரிஷப் பண்ட் காட்டமாகத் திட்டியது ஸ்டம்ப் மைக்கில் எதிரொலித்தது.

யஷஸ்வி ஜெய்ஸ்வால் திறமையான பேட்ஸ்மேனாக இருந்தாலும், ஃபீல்டிங் வியூகங்களைப் பொறுத்தவரை அடிக்கடி கேப்டன்களிடம் திட்டு வாங்குவது வாடிக்கையாகிவிட்டது. ஏற்கெனவே பார்டர்-கவாஸ்கர் டிராபியின் போது ரோஹித் சர்மா இவரைத் திட்டியிருந்தார். ஆண்டர்சன்-டெண்டுல்கர் டிராபியில் சுப்மன் கில்லும் இவருக்கு அறிவுரை வழங்கியிருந்தார். தற்போது ரிஷப் பண்ட்டும் அந்தப் பட்டியலில் இணைந்துள்ளார்.

ஈடன் கார்டன் ஆடுகளத்தை விட கவுஹாத்தி ஆடுகளம் முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது. இங்குப் பந்து நன்றாகத் திரும்புவதுடன், பவுன்ஸும் உள்ளது. இது நல்ல டெஸ்ட் கிரிக்கெட் ஆடுகளமாகப் பார்க்கப்படுகிறது. இந்தச் சூழலைச் சரியாகப் பயன்படுத்திய தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன்கள், அணியின் ஸ்கோரை 400-க்கு மேல் கொண்டு சென்று இந்திய அணிக்குக் கடும் நெருக்கடியை அளித்தனர்.

தென்னாப்பிரிக்க அணியின் பின்வரிசை பேட்ஸ்மேன்கள் சிறப்பாக ரன் குவித்து இந்திய அணியை திணற வைத்தனர். ஏழாம் வரிசையில் இறங்கிய செனுரன் முத்துசாமி சதம் அடித்தார். எட்டாம் வரிசை வீரர் கைல் வெரின் 45 ரன்களும், ஒன்பதாம் வரிசை வீரர் மார்கோ ஜான்சென் அரைசதமும் அடித்து ரன் குவித்தனர்.

Story first published: Sunday, November 23, 2025, 13:46 [IST]
Other articles published on Nov 23, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+