Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அவுட்டா..?? நாட் அவுட்டா?? நடுவர்கள் குழப்பம்..!! இந்தியாவுக்கு வட போச்சே தருணம்,,

ஜோகனஸ்பர்க்: இந்தியா, தென்னாப்பிரிக்காவுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி ஜோகனஸ்பர்க் நகரில் நடைபெற்று வருகிறது.

டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 202 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 50 ரன்கள் எடுத்தார்

நட்சத்திர வீரர்கள் ரஹானே, புஜாரா ஆகியோர் சொதப்பிய நிலையில், தமிழக வீரர் அஸ்வின் 45 ரன்கள் விளாசினார்

நெருக்கடி

நெருக்கடி

இதனையடுத்து 35 ரன்களுக்கு 1 விக்கெட் என்ற ஸ்கோருடன் தென்னாப்பிரிக்க அணி 2வது நாள் ஆட்டத்தை தொடர்ந்தது. எல்கார், பீட்டர்சன் இருவரும் இந்திய அணி வேகப்பந்துவீச்சை தாக்குப் பிடித்து விக்கெட்டுகளை பறிகொடுக்காமல் போராடி வருகின்றனர். பும்ராவும், முகமது ஷமியும் தங்களது பந்துவீச்சின் மூலம் தென்னாப்பிரிக்க வீரர்களுக்கு நெருக்கடி அளித்தனர்

ஆட்டமிழப்பு

ஆட்டமிழப்பு

இந்த நிலையில், ஆட்டத்தின் 24வது ஓவரில் ஒரு டுவிஸ்ட் ஏற்பட்டது. தென்னாப்பிரிக்க கேப்டன் டின் எல்கார், முதல் டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்சில் சதத்தை நோக்கி விளையாடினார். இதனால் அவரது விக்கெட்டை குறிவைத்து பும்ரா தொடர்ந்து பந்துவீச, அதற்கு பலனும் கிடைத்தது. பும்ரா வீசிய பந்த எல்காரின் பேட்டில் பட்டு அதனை ரிஷப் பண்ட் பிடித்தார்.

மூன்றாம் நடுவர்

மூன்றாம் நடுவர்

ஆனால் பந்து பேட்டில் பட்டதா என்று களத்தில் இருந்த நடுவருக்கு சந்தேகம் ஏற்பட அவர் மூன்றாம் நடுவரின் உதவியை நாடினார். SOFT SIGNAL அவுட் என்ற கொடுத்தார். இதனையடுத்து மூன்றாம் நடுவர் காட்சிகளை ரீப்ளே செய்து பார்த்தார். அப்போது பந்து பேட்டில் படாதது தெளிவாக தெரிந்தது.

Recommended Video

IND vs SA van der Dussen 'bump-ball' dismissal triggers controversy | Oneindia Tamil
நடுவரின் குழப்பம்

நடுவரின் குழப்பம்

இதனையடுத்து பெரிய திரையில் மூன்றாம் நடுவர் நாட் அவுட் என்று கொடுப்பதற்கு பதில், அவுட் என்று மாற்றி கொடுத்துவிட்டார். இதனால் எல்காரின் விக்கெட்டை வீழ்த்திவிட்டதாக இந்திய வீரர்கள் நினைத்த நிலையில், மூன்றாம் நடுவர் அது நாட் அவுட் தான் என்று மீண்டும் பெரிய திரையில் காட்டினார். இதனால் இந்திய அணி வீரர்கள், ஏமாற்றத்துடன் அடுத்த பந்தை வீச சென்றனர். 2வது விக்கெட்டுக்கு எல்கார், பீட்டர்சன் ஜோடி 50 ரன்களுக்கு மேல் சேர்த்து விளையாடி வருகிறது

Story first published: Tuesday, January 4, 2022, 17:12 [IST]
Other articles published on Jan 4, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+