Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சுப்மன் கில்லுக்கு வார்னிங் கொடுத்த தினேஷ் கார்த்திக்.. இந்த 2 பேர் உங்க இடத்துக்காக இருக்காங்க

மும்பை : தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் சிறப்பாக விளையாட வேண்டும் என்ற நெருக்கடியில் இருக்கிறார்கள்.கில் பேட்டிங் வரிசையில் மூன்றாவது இடத்தில் களமிறங்கியதில் இருந்து இதுவரை ஒரு முறை கூட 30 ரன்கள் கடக்கவில்லை.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில் கூட இரண்டு மற்றும் 26 ரன்களில் ஆட்டம் இழந்தார். கே எல் ராகுல் மற்றும் விராட் கோலி தவிர வேறு யாருமே நன்றாக விளையாடவில்லை. இந்த நிலையில் கில்லின் இடம் கேள்விக்குறியாக இருப்பதாக தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

 Ind vs sa 2nd test - Dinesh Karthik gives warning to shubman gill

இது குறித்து பேசிய அவர் கில் மீது மக்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பை வைத்திருந்தார்கள். ஆனால் டெஸ்ட் போட்டியை பொறுத்தவரை அந்த எதிர்பார்ப்பை அவர் நிவர்த்தி செய்யவில்லை. 20 டெஸ்ட் போட்டிகள் விளையாடிவிட்டு நீங்கள் பேட்டிங் சராசரி 30 என்ற அளவில் வைத்திருந்தால் அது நிச்சயம் உங்களுக்கு பலன் அளிக்காது.

கில்லின் இடம் நிச்சயம் தற்போது அபாயத்தில் இருக்கிறது. இரண்டாவது டெஸ்டில் அவர் சரியாக விளையாடவில்லை என்றால் அணியில் இருந்து நீக்கப்பட கூட வாய்ப்பு இருக்கிறது. நடு வரிசையில் நாம் சர்பிராஸ்கான் போன்ற வீரர்களை பயன்படுத்த வேண்டும். இந்தியா அவரை நிச்சயம் மிஸ் செய்கிறது என நினைக்கிறேன்.

சர்பிராஸ் கான் நினைப்பதை விட அவர் மிக விரைவில் டெஸ்ட் அணிக்கு வருவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அவரை தவிர மற்ற வீரர்கள் நடு வரிசைக்கு தற்போது இல்லை என்று தான் நான் நினைக்கின்றேன். அவரைத் தவிர ரஜத் பட்டிதார் என்ற ஆர்சிபி வீரர் நல்ல சாய்ஸாக இருப்பார்.

ரஜத் பட்டிதாரின் பெயரை தேர்வு குழுவினர் விரைவில் ஆலோசிப்பார்கள் என்று நான் நினைக்கிறேன் என்று தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார். இதுவரை கில் 19 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 994 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் இரண்டு சதம் நான்கு அரை சதம் அடங்கும் சராசரி 31 என்ற அளவில் இருக்கிறது.

Story first published: Monday, January 1, 2024, 13:37 [IST]
Other articles published on Jan 1, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+