Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒரே ஷாட்டால் வந்த வினை..!! ஹீரோவிலிருந்து ஜீரோவாக மாறிய பண்ட்.!! குறிவைக்கும் முன்னாள் வீரர்கள்..!

ஜோகனஸ்பர்க்: தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியை நோக்கி செல்கிறது

இதற்கு காரணம் இந்திய அணியின் மோசமான பேட்டிங் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

அனுபவ வீரர்கள் புஜாரா, ரஹானே அரைசதம் அடித்ததன் மூலம், ரசிகர்களின் பார்வை மற்றொரு இளம் நட்சத்திர வீரர் மீது திரும்பியுள்ளது.

கடைசி 13 இன்னிங்ஸ்

கடைசி 13 இன்னிங்ஸ்

ரிஷப் பண்ட் கடந்த 13 இன்னிங்சாகவே மோசமாக தான் விளையாடி வருகிறார். அதில் வெறும் 250 ரன்களை மட்டுமே அடித்துள்ள பண்டின் சராசரி 19ஆக குறைந்துள்ளது. இந்த நிலையில், 2வது இன்னிங்சில் தென்னாப்பிரிக்காவுக்கு கடுமையாக இலக்கை நிர்ணயிக்க வேண்டும் என்ற பொறுப்பு பண்டுக்கு இருந்தது.

டக் அவுட்

டக் அவுட்

ஆனால் ரிஷப் பண்டோ எதிர்கொண்ட மூன்றாவது பந்திலேயே இறங்கி வந்து ஷாட் ஆட முயற்சித்து விக்கெட் கீப்பரிடம் கேட்ச் ஆனார். ரிஷப் பண்டின் இந்த ஷாட், முன்னாள் வீரர்களை கோபமடைய செய்துள்ளது. இது தொடர்பாக கிரிக்கெட் வர்ணனையில் பேசிய முன்னாள் வீரர் கவாஸ்கர். ரிஷப் பண்ட்க்கு, டிராவிட் கம்பாலே அடித்து இருப்பார் என்று குறிப்பிட்டார்

கம்பீர் காட்டம்

கம்பீர் காட்டம்

இதே போன்று இந்திய அணியின் முன்னான் வீரர் கம்பீர், ரிஷப் பண்ட் ஆடிய ஷாட் முட்டாள் தனமானது என்றார். டி20 போட்டியில் ஆடி இருந்தால் யாரும் ஏதும் சொல்லி இருக்கப்போவது இல்லை. ஆனால் நெருக்கடியான நிலையில், இப்படி ஆடியதுக்கு பெயர் வீரம் அல்ல.. வீரத்திற்கும், முட்டாள் தனத்துக்கும் இடையே ஒரு மெல்லிய கோடு உள்ளது. ரிஷப் பண்ட் செய்தது முட்டாள் தனம் என்று தெரிவித்தார்.

வீரர்கள் ரோபோ அல்ல

வீரர்கள் ரோபோ அல்ல

வீரர்களுக்குள் ஸ்லேஜிங் செய்வதை நான் வரவேற்கிறேன். கிரிக்கெட் என்பது உணர்வுப்பூர்வமான விளையாட்டு. மனிதர்கள் தான் கிரிக்கெட் விளையாடுகிறார்கள். வீரர்கள் ஒன்றும் ரோபோ அல்ல, உணர்ச்சியை வெளிக்காட்டாமல் விளையாட, என்று கம்பீர் தெரிவித்தார். தென்னாப்பிரிக்க வீரர்கள் கொடுத்த அழுத்தத்தை கையாள முடியாமல் ரிஷப் பண்ட் ஆட்டமிழந்து விட்டார் . ரிஷப் ஒரு 20 ரன்கள் அடித்து இருந்தாலே, அது தென்னாப்பிரிக்காவுக்கு நெருக்கடி அளித்திருக்கும் என்று கம்பீர் கூறினார்.

Story first published: Thursday, January 6, 2022, 19:32 [IST]
Other articles published on Jan 6, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+