For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஜோகனஸ்பர்க் டெஸ்ட் வரலாறு என்ன சொல்லுது ?? தோல்வியை தவிர்க்க இந்தியா போராட்டம்..!!

ஜோகனஸ்பர்க்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்டில் இந்திய அணிக்கு தற்போது திடீர் சரிவு ஏற்பட்டுள்ளது.

ஜோகனஸ்பர்கில் இந்தியா தோல்வியே தழுவாத நிலையில், தற்போது இந்திய அணி பேட்ஸ்மேன்களின் பொறுப்பற்ற ஆட்டத்தால் தோல்வியை சந்திக்க உள்ளது

இந்திய அணி 2வது இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 155 ரன்கள் இருந்த நிலையில், அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

டக் அவுட்

டக் அவுட்

3வது விக்கெட்டுக்கு ரஹானே, புஜாரா ஜோடி 114 ரன்கள் சேர்த்து, இருவரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். புஜாரா இந்தியாவுக்கு வெளியே அதிவேக அரைசதம் இன்றைய போட்டியில் விளாசினார். இந்த ஜோடி சென்றதும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரிஷப் பண்ட் டக் அவுட்டாகி வெளியேறினார்,முதல் இன்னிங்சில் இந்திய அணியை காப்பாற்றிய அஸ்வின், 2வது இன்னிங்சிலும் ரன் அடிக்க முயற்சித்தார்.

அடுத்தடுத்து விக்கெட்

அடுத்தடுத்து விக்கெட்

ஆனால் 16 ரன்களில் அவர் வெளியேறினார்.இதனால் மதிய நேர உணவு இடைவேளையின் போது இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் எடுத்துள்ளது,சிறப்பாக பந்துவீசிய ரபாடா 3 விக்கெட்டுகளையும், லுங்கி கிடி 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.இதே போன்று 2018ஆம் ஆண்டு ஜோகனஸ்பர்கில் இந்தியா விளையாடியது. அப்போது இந்திய அணி முதல் இன்னிங்சில் 187 ரன்களும், தென்னாப்பிரிக்க அணி 194 ரன்களும் எடுத்தது

2018 டெஸ்ட்

2018 டெஸ்ட்

7 ரன்கள் பின்தங்கிய இந்திய அணி 2வது இன்னிங்சில் 247 ரன்கள் சேர்த்தது. 241 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி 177 ரன்களில் சுருண்டு தோல்வியை தழுவியது.தற்போது 2022ஆம் ஆண்டு ஜோகனஸ்பர்க் டெஸ்டும் அதே நிலையில் தான் இருக்கிறது. இந்தியா எப்படியாவது 250 ரன்களுக்கு மேல் இலக்கை நிர்ணயிக்க வேண்டும்.

Recommended Video

Ashwin Stunned With Shardul Thakur’s 5 Wicket Haul In Johannesburg | OneIndia Tamil
என்ன செய்யனும்?

என்ன செய்யனும்?

அப்போது தான் வெற்றி கிடைக்கும். இல்லையேனில் தென்னாப்பிரிக்கா போட்டியை வென்று தொடரை சமன் செய்துவிடும். 2013ஆம் ஆண்டு இதே மைதானத்தில் இந்தியா, தென்னாப்பிரிக்காவை எதிர்கொண்டது. அப்போது தென்னாப்பிரிக்க அணிக்கு 458 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. அதில் தென்னாப்பிரிக்க அணி 7 விக்கெட்டுகளை இழந்து 450 ரன்கள் எடுக்க, ஆட்டம் டிராவில் முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, January 5, 2022, 17:07 [IST]
Other articles published on Jan 5, 2022
English summary
Ind vs SA 2nd Test- India loosing wickets and How much target we need ஜோகனஸ்பர்க் டெஸ்ட் வரலாறு என்ன சொல்லுது ?? தோல்வியை தவிர்க்க இந்தியா போராட்டம்..!!
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+