
ராசியான மைதானம்
ஜோகனஸ்பர்கில் இந்தியா இதுவரை 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் இந்திய அணி 2 முறை வெற்றியும், 3 முறை டிராவையும் கண்டுள்ளது. ஆம், இதுவரை ஜோகனஸ்பர்க்கில் இந்தியா தோல்வியே தழுவியது இல்லை

விடுமுறை இல்லை
ஏற்கனவே முதல் போட்டியில் வென்ற உத்வேகத்துடன் உள்ள இந்திய அணி,ஜோகனஸ்பர்க் மைதானத்தில் தோல்வியே கண்டது இல்லை என்பதால், நல்ல உத்வேகத்துடன் உள்ளது. இன்று புத்தாண்டு தினமாக இருந்தால் கூட இந்திய அணி வீரர்கள் விடுமுறை எடுக்காமல் பயிற்சியில் ஈடுபட்டனர்

வலைப் பயிற்சி
குறிப்பாக விராட் கோலி சுமார் 2 மணி நேரத்திற்கு மேல் வலைப்பயிற்சியில் ஈடுபட்டார். 2 ஆண்டுகள் சதம் அடிக்காத நிலையில், புத்தாண்டை சதத்துடன் தொடங்கும் முனைப்பில் விராட் கோலி உள்ளார். புஜாரா, ரஹானே, ராகுல் ஆகியோரும் டிராவிட்டின் மேற்பார்வையில் பயிற்சி செய்து வருகின்றனர்

இந்தியா தயார்
இதனிடையே, முதல் போட்டியை இழந்த தென்னாப்பிரிக்க அணி வாழ்வா சாவா கட்டத்தில் 2வது டெஸ்டில் விளையாடுகிறது. இதற்காக இந்திய அணி வீரர்களை ஆட்டமிழக்க வைக்க ஷாட் பால்களை அதிகமாக வீச தென்னாப்பிரிக்க அணி முடிவு எடுத்துள்ளது. இதனால், அதனையும் எதிர்கொள்ள இந்திய அணி வீரர்கள் தயாராக உள்ளனர்.


Click it and Unblock the Notifications











