இது அதுல..?? தென்னாப்பிரிக்காவுக்கு 240 இலக்கை நிர்ணயித்தது இந்தியா..!! ஆடுகளம் யாருக்கு சாதகம்..
ஜோகனஸ்பர்க்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் 240 ரன்களை வெற்றி இலக்காக இந்திய அணி நிர்ணயித்துள்ளது.
Recommended Video
இந்திய அணி 27 ரன்கள் பின்தங்கிய நிலையில், இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்தது. கேப்டன் ராகுல் 8 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அதிரடியாக விளையாடி 5 பவுண்டரிகளை விளாசிய மாயங் அகர்வால் 23 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

காபாற்றிய சீனியர்கள்
85 ரன்களுக்கு 2 விக்கெட் என்ற ஸ்கோருடன் இந்திய அணி 3வது நாள் ஆட்டத்தை தொடர்ந்தது. பொறுப்புடன் விளையாடிய ரஹானே, புஜாரா ஜோடி அடுத்தடுத்து அரைசதம் கடந்தது. வெளிநாட்டு மண்ணில் புஜாரா அதிவேக அரைசதத்தை பூர்த்தி செய்தார். ,3வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 118 ரன்கள் சேர்த்தது. ரஹானே 58 ரன்களிலும், புஜாரா 53 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

ஷர்துல் அதிரடி
இதனைத் தொடர்ந்து களமிறங்கிய ரிஷப் பண்ட் டக் அவுட்டாகியும், அஸ்வின் 16 ரன்களிலும் வெளியேற, இந்திய அணி தடுமாறியது. அப்போது பந்துவீச்சில் 7 விக்கெட்டுகளை வீழ்த்திய ஷர்துல் தாக்கூர் 24 பந்துகளில் 28 ரன்கள் விளாசினார். இதில் 5 பவுண்டரிகளும், ஒரு சிக்சர்களும் அடங்கும். 7 வது விக்கெட்டுக்கு ஷர்துல், விஹாரி ஜோடி 41 ரன்களை சேர்த்தது.

240 ரன்கள் இலக்கு
பும்ரா 7 ரன்களில் பெவிலியன் திரும்ப, கடைசி வரை ஆட்டமிழக்காமல் விஹாரி 40 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம் இந்திய அணி 266 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனையடுத்து 240 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்னாப்பிரிக்க அணி விளையாடி வருகிறது. பந்து புதுசாக இருக்கும் போது இந்திய அணி முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும்.

ஷாட் பால்
மேலும் ஷாட் பால் பந்துவீச்சை இந்திய வீரர்கள் பயன்படுத்தி விக்கெட் எடுக்க முயற்சிக்க வேண்டும். ஆடுகளம் பேட்டிங்கிற்கு கொஞ்சம் சாதகமாக செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது. கடைசியாக 2018ஆம் ஆண்டு இந்திய அணி , இதே மைதானத்தில் 241 ரன்களை இலக்காக நிர்ணயித்த இந்திய அணி , 177 ரன்களில் தென்னாப்பிரிக்காவை சுருட்டியது. தற்போது அதே போல் இந்தப் போட்டியும் உள்ளது


Click it and Unblock the Notifications