Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஷர்துல் 7 விக்கெட்.. இந்தியாவின் வெற்றி இவங்க கையில் தான் இருக்கு..!! எப்படி போச்சு 2வது நாள்..?

ஜோகனஸ்பர்க்: இந்தியா, தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

இந்திய அணி முதல் இன்னிங்சில் 202 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக கே.எல்.ராகுல் அரைசதம் விளாசினார்

இதனையடுத்து தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. 35 ரன்களுக்கு 1 விக்கெட் என்ற ஸ்கோருடன் தென்னாப்பிரிக்க அணி 2வது நாள் ஆட்டத்தை தொடர்ந்தது.

பீட்டர்சன் அபாரம்

பீட்டர்சன் அபாரம்

தென்னாப்பிரிக்க அணியின் இளம் வீரர் பீட்டர்சன், எல்காருடன் ஜோடி சேர்த்து 2வது விக்கெட்டுக்கு 74 ரன்களை சேர்த்தார். கேப்டன் டீன் எல்கார் 28 ரன்களில் ஆட்டமிழந்தார், சிறப்பாக விளையாடிய பீட்டர்சன் 62 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினார். இருவரின் விக்கெட்டுகளையும் ஷர்துல் தாக்கூர் அடுத்தடுத்து வீழ்த்தினார். வெண்டர் டுசன் 1 ரன்னில் ஆட்டமிழந்தார்

ஷர்துல் தாக்கூர் அசத்தல்

ஷர்துல் தாக்கூர் அசத்தல்

இதனையடுத்து, துணை கேப்டன் பெவுமா, வெர்ரைனே ஜோடி சேர்ந்து அணியை சரிவிலிருந்து மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இருவரும், மீண்டும் பார்டனர்ஷிப்பை அமைத்து இந்தியாவுக்கு நெருக்கடி தர, அந்த ஜோடியை மீண்டும் பிரித்தார் லார்ட் ஷர்துல் தாக்கூர். பெவுமா 51 ரன்களிலும், வெர்ரைனே 21 ரன்களிலும் ஷர்துல் பந்துவீச்சில் பெவிலியன் திரும்பினர்.

229 ரன்களுக்கு ஆட்டமிழப்பு

229 ரன்களுக்கு ஆட்டமிழப்பு

இறுதியில் கேஷவ் மகாராஜ் 21 ரன்களில் பும்ரா பந்துவீச்சில் வெளியேற, மற்ற வீரர்களை ஷர்துல் ஆட்டமிழக்க செய்தார். இதனால் தென்னாப்பிரிக்க அணி 229 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஷர்துல் தாக்கூர் அதிகபட்சமாக 7 விக்கெட்டுகளை சாய்த்து, ஜோகனஸ்பர்கில் ஒரு இன்னிங்சில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வெளிநாட்டு வீரர் என்ற சாதனையை சமன் செய்தார். இதனையடுத்து 27 ரன்கள் பின்தங்கிய நிலையில், இந்திய அணி 2வது இன்னிங்சை தொடர்ந்தது,

Recommended Video

Ashwin Stunned With Shardul Thakur’s 5 Wicket Haul In Johannesburg | OneIndia Tamil
இந்தியா முன்னிலை

இந்தியா முன்னிலை

கேப்டன் கே.எல்.ராகுல் 8 ரன்களில் ஆட்டமிழக்க, 5 பவுண்டரிகளை விளாசி அதிரடி காட்டிய மாயங் அகர்வால் 23 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.இதனையடுத்து ரசிகர்களால் வச்சு செய்யப்பட்ட புஜாரா, ரஹானே ஜோடி தங்களது கிரிக்கெட் வாழ்க்கையை காபாற்றி கொள்ளும் முனைப்பில் களமிறங்கி ரன்களை சேர்த்து வருகின்றனர். ஆட்டநேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 85 ரன்கள் எடுத்துள்ளது. புஜாரா 35 ரன்களுடனும், ரஹானே 11 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். தற்போது வரை இந்திய அணி 58 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

Story first published: Tuesday, January 4, 2022, 22:21 [IST]
Other articles published on Jan 4, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+