Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சி.எஸ்.கே. வீரரின் விக்கெட் வேட்டையால் சரிந்தது தென்னாப்பிரிக்கா.. லார்ட் என்று புகழாரம்

ஜோகனஸ்பர்க்: தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி சொதப்பலான பேட்டிங்கை வெளிப்படுத்தியது

Recommended Video

முதல் முறையாக 7 Wicket எடுத்து அசத்தல்.. India-வை காப்பாற்றிய Lord Shardul

தென்னாப்பிரிக்க அணியின் பேட்டிங்கும் அசத்தலாகவே இருந்தது. அந்த அணியின் இளம் வீரர் பீட்டர்சன் அரைசதம் விளாசினார்.

இதனால் இந்தியாவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரான 202 ஐ விட தென்னாப்பிரிக்க அணி 100 ரன்கள் அதிகமாக அடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

அட்டகாச பந்துவீச்சு

அட்டகாச பந்துவீச்சு

இந்திய வீரர்களின் வேகப்பந்துவீச்சை தென்னாப்பிரிக்க வீரர்கள் பீட்டர்சன் லாவகமாக எதிர்கொண்டு ரன்கள் அடித்தார். எங்கே இருந்து தான் விக்கெட் வருமோ என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், நான் இருக்கிறேன் என்று அனல் பறக்கும் பந்துவீச்சை வெளிப்படுத்தினார் ஷர்துல் தாக்கூர்.

அடுத்தடுத்து விக்கெட்

அடுத்தடுத்து விக்கெட்

பீட்டர்சனை 62 ரன்களிலும், டீன் எல்காரை 28 ரன்களிலும் ஷர்துல் தாக்கூர் ஆட்டமிழக்க வைத்தார். சரியாக மதிய உணவு நேரத்திற்கு முன் வெண்டர் டுசனையும் பெவிலியனுக்கு அனுப்பினார் ஷர்துல் தாக்கூர். இதே போன்று அந்த அணியின் துணை கேப்டன் பெவுமா, அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்தார்.

5 விக்கெட்டுகள்

5 விக்கெட்டுகள்

அவர் இந்திய அணியிடமிருந்து ஆட்டத்தை கடத்திவிட்டு செல்வார் என எதிர்பார்த்த நிலையில் பெவுமா விக்கெட்டையும் ஷர்துல் தாக்கூர் வீழ்த்த, விக்கெட் கீப்பர் வெர்ரைனேயையும் ஆட்டமிழக்க செய்த ஷர்துல்,சர்வதேச டெஸ்டில் முதல் முறையாக 5 விக்கெட்டை வீழ்த்தினார்.பிரிஸ்பேன், நாட்டிங்கம், ஓவல் ஆகிய மைதானங்களில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் ஷர்துல் தாக்கூர் கலக்கினார்

டிரெண்டிங்கில் தாக்கூர்

டிரெண்டிங்கில் தாக்கூர்

இதனால் ஷர்துல் தாக்கூரை ரசிகர்கள் லார்ட் தாக்கூர் என்று அன்புடன் அழைக்கின்றனர். தற்போது 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் லார்ட் தாக்கூர் என்று டிவிட்டரில் ரசிகர்கள் டிரெண்ட் செய்தனர். பேட்டிங்கிலும் ணர்துல் கலக்கினால் இந்தியாவுக்கு அது பெரும் உதவியை தரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, January 4, 2022, 19:13 [IST]
Other articles published on Jan 4, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+