Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கொஞ்சம் பொறுங்க கண்டிப்பா வரும்..!! விராட் கோலிக்காக குரல் கொடுத்த டிராவிட்…

ஜோகனஸ்பர்க்: இந்தியா, தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது.

இந்தப் போட்டிக்காக இரு அணி வீரர்களும் கடுமையாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

போட்டிக்கு முன் செய்தியாளர்களை பயிற்சியாளர் டிராவிட் சந்தித்தார். அப்போது இந்திய அணி பேட்ஸ்மேன்களின் ஃபார்ம், ஜோகனஸ்பர்க் ஆடுகளம் குறித்து டிராவுட் பேசினார்

ஆடுகளம் எப்படி?

ஆடுகளம் எப்படி?

ஜோகனஸ்பர்க் மைதானத்தில் நாங்கள் சிறப்பாகவே செயல்பட்டுள்ளோம். இங்குள்ள ஆடுகளத்தில் பந்து வேகமாக பேட்டுக்கு வரும். ஆனால் செஞ்சூரியன் ஆடுகளம் போல் பந்து பவுண்ஸ் ஆகாது. இதனால் வேகப்பந்துவீச்சாளர்களுக்கும், பேட்ஸ்மேன்களுக்கும் சம அளவில் ஆடுகளம் வாய்ப்பு தரும்.

சிறந்த கேப்டன்

சிறந்த கேப்டன்

விராட் கோலி தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த டிராவிட், கோலி ஒரு சிறந்த தலைவராக விளங்குகிறார். எப்போதும் அணியை உற்சாகமாக வைத்து கொள்கிறார், ஊக்கம் தருகிறார். அவருடன் இணைந்து பணியாற்றுவதில் எந்த சிக்கலும் இல்லை. பேட்ஸ்மேனாக கோலியை பற்றி கவலைப்பட தேவையில்லை.

சதம் எப்போது வரும்

சதம் எப்போது வரும்

விராட் கோலி கடுமையாக பயிற்சி மேற்கொண்டு வருகிறார். சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற உத்வேகம் அவரிடம் உள்ளது. இதனால் நிச்சயமாக அவர் பெரிய சதங்களை விளாசுவார். அவர் செய்யும் பயிற்சி, பேட்டிங்கில் கூடிய சீக்கிரம் பிரதிபலிக்கும்.

சீனியர்கள் நிலை

சீனியர்கள் நிலை

விராட் கோலி மட்டுமல்ல மேலும் 2 வீரர்களுக்கும் இதே பிரச்சினை தான். மனதளவில் நல்ல உத்வேகத்துடன் உள்ளனர். கடும் பயிற்சி மேற்கொள்கின்றனர். ஆனால் சில சமயம் அது ரன்களாக மாறவில்லை. நிச்சயம் அந்த நிலை மாறும் என்று அவர் கூறினார்

தோனி வழி..

தோனி வழி..

டிராவிட்டின் பேட்டி மூலம் 2வது டெஸ்டிலும் புஜாரா, ரஹானே ஆகியோருக்கு தான் வாய்ப்பு என்று உறுதியாகிவிட்டது. இதனால், ஸ்ரேயாஸ் ஐயர், விஹாரி ஆகியோர் இந்த டெஸ்டிலும் பெஞ்சை தேய்க்க தான் தென்னாப்பிரிக்காவுக்கு பி.சி.சி.ஐ. அழைத்து சென்றுள்ளதா என்று ரசிகர்கள் விமர்சனம் வைத்துள்ளனர். இதே போன்று தோனி கேப்டனாக இருந்த போது, அப்போதைய சீனியர் வீரர்கள் ஃபார்ம் அவுட்டாகி இருந்தனர். இதனால் தோனி, அவர்களை அணியை விட்டு வெளியேற்றினார்

Story first published: Sunday, January 2, 2022, 17:42 [IST]
Other articles published on Jan 2, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+