Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தென்னாப்பிரிக்க வீரரை வச்சு செய்த ரிஷப் பண்ட்..!! ஸ்டம்ப் மைக்கில் பதிவான அந்த வார்த்தை..

ஜோகனஸ்பர்க்: இந்தியா, தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி பாலிவுட் மசாலா படம் போல் அமைந்துவிட்டது.

பேட்டிங், பந்துவீச்சையும் தாண்டி வீரர்கள் ஒருவரை ஒருவர் வார்த்தைகளால் மோதி கொண்டும், ஸ்லேஜ் செய்து கொண்டும் வருகின்றனர்.

இதனால் ரசிகர்களுக்கு இந்த டெஸ்ட் போட்டி பெரும் பொழுதுப்போக்காக அமைந்துள்ளது. இதனால் இந்த போட்டியின் முடிவு பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

ஆரம்பித்த தெ.ஆப்பிரிக்க வீரர்கள்

ஆரம்பித்த தெ.ஆப்பிரிக்க வீரர்கள்

இந்திய அணி தங்களது 2வது இன்னிங்சில் பேட் செய்யும் போது தென்னாப்பிரிக்க வீரர்கள் ஸ்லேஜ் செய்தனர். இந்திய வீரர்களின் கவனத்தை குலைக்கும் வகையில் தென்னாப்பிரிக்க வீரர்கள் நடந்து கொண்டனர். குறிப்பாக ரிஷப் பண்ட்க்கு ஷாட் பாலாக வீசியும் கேலியும் செய்ய, அவர் டக் அவுட்டாகி வெளியேறினார்

பும்ராவுடன் மோதல்

பும்ராவுடன் மோதல்

இதே போன்று பும்ராவையும் தென்னாப்பிரிக்க பந்துவீச்சாளர்கள் விட்டுவைக்கவில்லை. அவர் பேட்டிங் செய்த போது, அவருக்கு காயம் ஏற்படுத்தும் விதமாக பந்துவீசி சண்டைக்கு அழைத்து வம்பிழுத்தனர். நேற்று கேப்டன் கே.எல்.ராகுலையும் இதே போன்று தென்னாப்பிரிக்க வீரர்கள் வம்பிழுத்தனர்.

திருப்பி கொடுத்த பண்ட்

திருப்பி கொடுத்த பண்ட்

இதனால் கடுப்பான இந்திய வீரர்கள் தற்போது தென்னாப்பிரிக்க வீரர்களுக்கு அவர்களது மருந்தையே திருப்பி கொடுத்தனர். குறிப்பாக ஸ்டம்புக்கு பின்னால் நின்று கொண்ட ரிஷப் பண்ட், தென்னாப்பிரிக்க வீரர்களை வச்சு செய்தார். குறிப்பாக தென்னாப்பிரிக்க வீரர் வெண்டர் டுசன் பேட்டிங் செய்ய வந்தார்

ரிஷப் பண்ட் கிண்டல்

ரிஷப் பண்ட் கிண்டல்

ஒவ்வொரு அணிக்கும் 4வது வீரர் மிகவும் முக்கியம். ஆனால் வெண்டர்டுசன் 4வது வீரராக களமிறங்கி இந்த தொடரில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் அவரை கிண்டல் செய்யும் விதமாக, வந்து இறங்குவது 4வது வீரராக, ஆனால் பேட்டிங் பற்றி ஒன்னும் தெரியாது. ஆனால் எதிரணி வீரர்களை கேலி மட்டும் செய்ய தெரியும் என்று வம்பிழுத்தார்.இதே போன்று டீன் எல்கரையும் ரிஷப் பண்ட் தொடர்ந்து கிண்டல் செய்தே வந்தார். பும்ரா, ஷர்துல் தாக்கூர், ஷமியும் தென்னாப்பிரிக்க வீரர்களுக்கு ஷாட் பாலை வீசி நெருக்கடி அளித்தனர். தென்னாப்பிரிக்க வீரர்களுக்கு அவர்களது பாணியில் ரிஷப் பண்ட் திருப்பி தருவதுக்கு ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

Story first published: Wednesday, January 5, 2022, 21:09 [IST]
Other articles published on Jan 5, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+