ஆட்டமிழந்தவுடன் கோபத்தில் ரிஷப் பண்ட் செய்த காரியம்.. ரிஷப் பண்ட் மீது நடவடிக்கை பாயுமா?
ஜோகனஸ்பர்க்: இந்தியா, தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டியில் தற்போது இரு அணி வீரர்களுக்கும் வெற்றி வாய்ப்பு ஏற்பட்டுள்ளது
முதல் இன்னிங்சில் இந்திய அணி 202 ரன்களும், தென்னாப்பிரிக்க அணி 229 ரன்களும் எடுத்தது.
27 ரன்கள் பின்தங்கிய நிலையில், இந்திய அணி 2வது இன்னிங்சை தொடங்கியது. 44 ரன்களுக்கு 2 விக்கெட் என்ற ஸ்கோருடன் இந்தியா தடுமாறியது.

பொறுப்பான ஆட்டம்
இதனையடுத்து ஃபார்மில் இல்லாத புஜாராவும், ரஹானேவும் இந்திய அணியை சரிவிலிருந்து மீட்கும் பணியை தொடங்கினர். இருவரும் அதிரடியாக விளையாடி அடுத்தடுத்து அரைசதம் கடக்க,3வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 118 ரன்கள் சேர்த்தது. ரஹானே 58 ரன்களிலும், புஜாரா 53 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

ஷாட் பால் ஆயுதம்
இதனையடுத்து ரிஷப் பண்ட் ஆடுகளத்திற்கு வந்தார். ரிஷப் பண்ட் அதிரடியாக விளையாடி இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்துவார் என எதிர்பார்க்கப்பட்டது. இதனை தடுக்கும் விதமாக தென்னாப்பிரிக்க வீரர்கள், ஒரு யுத்தியை கையாண்டனர். ரிஷப் பண்ட்க்கு தொடர்ந்த ஷாட் பால் வீசப்பட்டது

பேட்டை அடித்த பண்ட்
இதனால் கடுப்பான ரிஷப் பண்ட், அடுத்த பாலை இறங்கி வந்து தேவையில்லாத ஷாட் அடிக்க முயன்றார். அப்போது பந்து பேட்டில் பட்டு விக்கெட் கீப்பரிடம் சிக்கியது.இதனால் ரிஷப் பண்ட் டக் அவுட்டாக, தென்னாப்பிரிக்க வீரர்கள் அவரை கிண்டல் செய்தனர். இதனால் ஆத்திரமடைந்த ரிஷப் பண்ட், டிரெஸிங் ரூம்க்கு செல்லும் வகையில் வீரர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள பாதையில் இருந்த கம்பியை பேட்டால் ஓங்கி அடித்தார்
Recommended Video

நடவடிக்கை பாயுமா?
ரிஷப் பண்டின் இந்த நடவடிக்கையால் அவர் மீது ஐ.சி.சி. நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது. மேலும் பெவிலியன் செல்வதற்கு முன் தென்னாப்பிரிக்க வீரரை ரிஷப் திட்டியதாகவும் கூறப்படுகிறது. ரிஷப் பண்ட் பொறுப்பற்ற முறையில் ஆட்டமிழந்ததாக முன்னாள் கேப்டன் கவாஸ்கர் குற்றஞ்சாட்டினார். தற்போது தென்னாப்பிரிக்க வேகப்பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இந்தியா தடுமாறி வருகிறது.


Click it and Unblock the Notifications