ராகுல்- ராகுல் போட்ட பிளான் வொர்க் அவுட் ஆகல.. கை நழுவிச் செல்லும் வெற்றி??
ஜோகனஸ்பர்க்: ஜோகனஸ்பர்க் மைதானத்தில் இந்தியா இதுவரை தோற்றது இல்லை என்ற வரலாறு மாறிவிடுமோ என்ற சூழல் ஏற்பட்டுள்ளது.
ஆம், இந்தியாவுக்கு எதிராக முதல் டெஸ்டில் தோல்வி அடைந்த தென்னாப்பிரிக்க அணி 2வது டெஸ்டில் மெல்ல, மெல்ல ஆதிக்கம் செலுத்தி வருகிறது
முதல் இன்னிங்சில் இந்திய அணி 202 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் தென்னாப்பிரிக்காவை குறைந்த இலக்கிலேயே ஆட்டமிழக்க வைக்கும் நெருக்கடியுடன் இந்திய அணி வீரர்கள் உள்ளனர்.

நல்ல தொடக்கம்
தென்னாப்பிரிக்க அணி 35 ரன்களுக்கு 1 விக்கெட் என்ற ஸ்கோருடன் 2வது நாள் ஆட்டத்தை தொடர்ந்தது. அந்த அணியின் கேப்டன் டில் எல்கார். முதல் டெஸ்டிலேயே நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால், 2வது டெஸ்டில் அவரது விக்கெட்டை வீழ்த்த இந்திய வீரர்கள் கடுமையாக முயற்சித்தனர்

அசத்தும் பீட்டர்சன்
ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக தென்னாப்பிரிக்க அணியின் இளம் வீரர் பீட்டர்சன், எல்காருடன் ஜோடி சேர்ந்து இநதியாவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறார். பந்து புதுசாக இருந்ததால், முதலில் அதனை அவர் தொடாமல் அமைதி காத்து வந்தார். தற்போது பந்து கொஞ்சம் பழசாக மாறிவிட்டதால் பீட்டர்சன் பவுண்டரிகளாக விளாசி வருகிறார்.

வெற்றி வாய்ப்பு
2வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 74 ரன்களை எடுத்தது. கேப்டன் டீன் எல்கார் 28 ரன்களில் ஆட்டமிழந்தார். தற்போது 39 ஓவர் முடிவில் தென்னாப்பிரிக்க அணி 2 விக்கெட்டு இழப்பிற்கு 88 ரன்கள் எடுத்துள்ளது. இது இந்திய அணியை விட 114 ரன்களே குறைவாகும். இதனால் கைவசம் 9 விக்கெட்டுகள் இருக்க, இந்திய அணியை விட முன்னிலை பெற தென்னாப்பிரிக்காவுக்கு அதிக வாய்ப்பு உள்ளது
Recommended Video

இந்தியாவுக்கு நெருக்கடி
வேகப்பந்துவீச்சுக்கு கடினமான ஆடுகளத்தில், மோசமான ஃபார்ம் உடைய வீரர்களை வைத்து கொண்டு தென்னாப்பிரிக்க அணி முன்னிலை பெற்றால், இந்திய அணிக்கு தோல்வி நிச்சயமாகி விடும். முதல் டெஸ்ட்டில் அடைந்த வரலாற்று வெற்றியும் வீணாகிவிடும். இதனால் இந்திய பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்துவீச்சாளர்களுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications