Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பழி தீர்த்த தென்னாப்பிரிக்கா.. இந்தியாவின் கோட்டை உடைந்தது..IND vs SA 2nd Test

ஜோகனஸ்பர்க்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது

டாஸ் இந்திய அணி முதல் இன்னிங்சில் 202 ரன்களுக்கு ஆட்டமிழக்க, தென்னாப்பிரிக்க அணி 229 ரன்களை எடுத்தது.

இந்திய அணி 27 ரன்கள் பின்தங்கிய நிலையில், இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்தது. கேப்டன் ராகுல் 8 ரன்களில் ஆட்டமிழந்தார்.

தப்பித்த சீனியர்கள்

தப்பித்த சீனியர்கள்

அதிரடியாக விளையாடி 5 பவுண்டரிகளை விளாசிய மாயங் அகர்வால் 23 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பொறுப்புடன் விளையாடிய ரஹானே, புஜாரா ஜோடி அடுத்தடுத்து அரைசதம் கடந்தது.. ,3வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 118 ரன்கள் சேர்த்தது. ரஹானே 58 ரன்களிலும், புஜாரா 53 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

விஹாரி இன்னிங்ஸ்

விஹாரி இன்னிங்ஸ்

ரிஷப் பண்ட் டக் அவுட்டாகியும், அஸ்வின் 16 ரன்களிலும் வெளியேற, இந்திய அணி தடுமாறியது. ஷர்துல் தாக்கூர் 24 பந்துகளில் 28 ரன்கள் விளாசினார். கடைசி வரை ஆட்டமிழக்காமல் விஹாரி 40 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம் இந்திய அணி 266 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனையடுத்து 240 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்னாப்பிரிக்க அணி தனது கடைசி இன்னிங்சை தொடங்கியது.

நல்ல தொடக்கம்

நல்ல தொடக்கம்

தொடக்க வீரராக களமிறங்கிய ஏய்டன் மார்க்ரம் அதிரடியாக விளையாடி பவுண்டரிகளை விளாசினார். 38 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து ஷர்துல் பந்தில் ஆட்டமிழந்தார்.இதன் பின்னர் களமிறங்கிய பீட்டர்சன்னும் கட்டையை போட்டு வெறுப்பேற்ற, அஸ்வின் அவரது விக்கெட்டை வீழ்த்தினார். 4வது நாள் ஆட்டத்தை தென்னாப்பிரிக்க அணி 2 விக்கெட் இழப்பிற்கு 118 ரன்கள் என்ற ஸ்கோருடன் தென்னாப்பிரிக்க தொடங்க இருந்தது.

இந்தியா தோல்வி

இந்தியா தோல்வி

யாரும் எதிர்பாராத விதமாக ஜோகனஸ்பர்கில் கன மழை கொட்டியது. இதனால் இன்றைய ஆட்டம் கைவிடப்பட நிலை உருவானதுகிட்டதட்ட 60 ஓவர்களுக்கு மேல் வீச முடியாத நிலை ஏற்பட்டது. பிறகு மாலை நேரத்தில் ஆட்டம் தொடங்கியதும், அதுவரை மெதுவாக விளையாடி கொண்டிருந்த தென்னாப்பிரிக்க வீரர்கள், அதிரடி ஆட்டத்தை தொடங்கிவிட்டனர். குறிப்பாக 10 ஓவர்களில் 50 ரன்கள் விளாசினார்.வெண்டர்டுசன் 40 ரன்களில் ஆட்டமிழக்க, சிறப்பாக விளையாடிய எல்கார், 188 பந்துகளை பிடித்து 96 ரன்கள் எடுத்து தென்னாப்பிரிக்காவின்வெற்றியை உறுதி செய்தார். இதன் மூலம் ஜோகனஸ்பர்கில் முதல் முறையாக டெஸ்ட் போட்டியில் இந்தியா தோல்வியை தழுவியது.

Story first published: Thursday, January 6, 2022, 22:22 [IST]
Other articles published on Jan 6, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+