Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs SA: தமிழக வீரர் சேனுரான் முத்துசாமியை களமிறக்கிய தென்னாப்பிரிக்கா.. கோலி ஃபார்முலாவை எடுத்த பவுமா

கவுஹாத்தி: இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்க அணியின் கேப்டன் பவுமா விராட் கோலியின் பார்முலாவை பயன்படுத்தி இருக்கிறார். இதற்காக தமிழக வம்சாவளியை சேர்ந்த சேதுராம் முத்துசாமி என்ற வீரரை பவுமா தேர்வு செய்துள்ளார்.

முதல் டெஸ்ட் போட்டியில் ஆடுகளம் முற்றிலும் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்தது. அப்போது தென்னாப்பிரிக்காவில் இரண்டு சுழற் பந்துவீச்சாளர்களையும், இந்தியா நான்கு சுழற்பந்துவீச்சாளர்களையும் வைத்து களமிறங்கியது.

senuran-muthusamy

இந்திய ஆடுகளத்தில் சுழற் பந்துவீச்சு தாக்கம் மிகவும் அதிகமாக இருக்கும் என்பதால் விராட் கோலி கேப்டனாக இருந்த காலத்தில் மூன்று சுழற் பந்துவீச்சாளர்களை வைத்து களமிறங்குவார். அதனை ரோகித் சர்மாவும் பின்பற்றி வந்தார். இதன் மூலம் பேட்டிங், பந்துவீச்சு என இரண்டுக்குமே இந்திய அணியில் சரிசமமான பேலன்ஸ் இருக்கும்.

ஆனால் கம்பீர் பயிற்சியாளராக வந்தவுடன் இந்த பார்முலாவை அடிக்கடி மாற்றினார். கொல்கத்தா டெஸ்ட் போட்டியில் நான்கு ஸ்பின்னர் வைத்திருந்ததன் மூலம் எந்த வீரருக்குமே பெரிய அளவு ஓவர்களை வழங்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் கவுகாத்தி டெஸ்ட் போட்டியில் சுழற் பந்துவீச்சு தாக்கம் இருக்கும் என்பதால் சேதுராம் முத்துசாமியை கேப்டன் பவுமா அணியில் மூன்றாவது ஸ்பின்னர் ஆக சேர்த்திருக்கிறார்.

மேலும் இவர் பேட்டிங்கும் நன்றாக செய்வார் என்பதால் அது தென்னாப்பிரிக்காவுக்கு கூடுதல் பலமாக இருக்கிறது. அண்மையில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மொத்தம் 11 விக்கெட் களையும் இரண்டாவது டெஸ்டில் பேட்டிங்கில் ஆட்டம் இழக்காமல் 89 ரன்களையும் அடித்து தொடர் நாயகன் விருதை சேதுரான் முத்துசாமி வென்றார்.

சேனுரான் முத்துசாமி ஏற்கனவே இந்தியாவில் தனது டெஸ்ட் போட்டியில் விளையாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவை வீழ்த்த இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒருவரையே தென்னாப்பிரிக்கா சேர்த்திருப்பது குறிப்பிடத்தக்கது.31 வயதான சேனுராம் முத்துசாமி, இதுவரை 7 டெஸ்ட் போட்டியில் விளையாடி இருக்கிறார்.

இதில் பேட்டிங்கில் 2 அரைசதமும், பவுலிங்கில் 22 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். சேனுராம் முத்துசாமியின் பூர்வீகம் நாகப்பட்டினம் ஆகும். ஆனால் இவர் தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரில் தான் பிறந்தநார் என்பது குறிப்பிடத்தக்கது. நாகப்பட்டினத்தில் உள்ள சொந்தக்காரர்களை பார்க்க அடிக்கடி வரும் சேனுரான், இந்திய வழக்கப் படியே வாழ்ந்து வருகிறார்.

Story first published: Saturday, November 22, 2025, 10:11 [IST]
Other articles published on Nov 22, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+