Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“இந்தியாவின் கோட்டை வாண்டரர்ஸ்”.. வரலாற்றில் அசைகக் முடியாத ரெக்கார்ட்கள் - என்ன காரணம்!

ஜோஹனஸ்பர்க்: 2வது டெஸ்ட் போட்டி நடைபெறும் வான்டரர்ஸ் மைதானத்தில் அசத்தலான ரெக்கார்டை வைத்துள்ளது இந்திய அணி.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில் வரலாற்று வெற்றியை பதிவு செய்த இந்திய அணி அடுத்ததாக இன்று ஜோஹனஸ்பர்க்கில் உள்ள வான்டரர்ஸ் மைதானத்தில் 2வது டெஸ்டை எதிர்கொள்கிறது.

2022 புத்தாண்டின் முதல் டெஸ்டான இதில் வெற்றி பெற்று தென்னாப்பிரிக்காவில் டெஸ்ட் தொடரை வெல்லும் முதல் ஆசிய அணி என்ற பெருமையை பெற கோலியின் அணி முனைப்பு காட்டி வருகிறது.

இந்திய வெற்றி வாய்ப்பு

இந்திய வெற்றி வாய்ப்பு

இந்திய அணியின் இந்த நம்பிக்கையை உடைப்பதில் தென்னாப்பிரிக்காவுக்கு சிரமமான ஒன்றாகவே உள்ளது. ஏனென்றால் போட்டி நடைபெறும் வாண்டரர்ஸ் மைதானம் இந்திய அணியின் கோட்டையாகும். தென்னாப்பிரிக்காவில் தங்களது முதல் டெஸ்டிலேயே 4 இந்திய வீரர்கள் சதமடித்துள்ளனர். அதில் 3 சதங்கள் வாண்டரர்ஸ் மைதானத்தில் வந்ததாகும். சச்சின் 111 ரன்கள் - 1992, விராட் கோலி 119 - 2013, ராகுல் டிராவிட் 148 ரன்கள் -ன் 1997.

அசத்தல் புள்ளிவிவரம்

அசத்தல் புள்ளிவிவரம்

வாண்டரர்ஸ் மைதானத்தில் இந்திய அணி இதுவரை ஒரு முறை கூட தோல்வியை சந்தித்ததில்லை என்ற பெருமை உள்ளது. இதுவரை இங்கு 5 போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணி 2 முறை வெற்றி பெற்றுள்ளது. 2006ல் 123 ரன்கள் வித்தியாசத்திலும் 2018ல் 63 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி கண்டுள்ளது. 3 ஆட்டங்கள் சமனில் முடிவடைந்துள்ளது.

வெற்றி விவரங்கள்

வெற்றி விவரங்கள்

இந்திய அணி இதுவரை 19 அயல்நாட்டு மைதானங்களில் 5 டெஸ்ட் போட்டிகளுக்கு மேல் விளையாடியுள்ளது. அதில் வாண்டரர்ஸ் மைதானத்தில் தான் இதுவரை ஒருமுறை கூட இந்திய அணி தோல்வியையே சந்திக்கவில்லை. வெஸ்ட் இண்டீஸின் ஜார்ஜ் டவுனில் கூட இந்தியா 6 போட்டிகளில் ஒரு தோல்வி கூட பெறவில்லை. ஆனால் அவை அனைத்துமே சமனில் முடிந்தவை. வெற்றிகளை பொறுத்தவரை வாண்டரர்ஸ் தான் கோட்டையாக உள்ளது.

Recommended Video

India ahead after Shardul blows, Day 2 Stumps: Lead by 58 Runs | OneIndia Tamil
அசுரத்தனமான சராசரி

அசுரத்தனமான சராசரி

இங்கு இந்திய அணி வெற்றிகரமாக இருப்பதற்கு பந்துவீச்சாளர்களின் சராசரி மற்றும் பேட்ஸ்மேன்களின் ஸ்ட்ரைக் ரேட்டே உதாரணம். இங்கு இந்திய பவுலர்கள் 27.59 சராசரியாக வைத்துள்ளனர். இதுவரை இங்கு 88 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளனர். இதே போல பேட்டிங் ஸ்ட்ரைக் ரேட் 57.8 ஆக உள்ளது. இந்த புள்ளிவிவரங்கள் மற்ற அணிகளை விட மிக அதிகம் ஆகும். இதனால் தான் 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என கூறப்படுகிறது.

Story first published: Monday, January 3, 2022, 17:32 [IST]
Other articles published on Jan 3, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+