
தோனி அறிவுரை
தோனி அடிக்கடி பேட்டியில் கூறுவார். ஒரு போட்டியில் வென்றால் , நமது அணியில் உள்ள குறைகள் எல்லாம் கார்ப்பேட்டுக்கு அடியில் மறைந்துவிடாது. நாம் செய்த தவறை திருத்தி கொண்டால் தான், அந்த வெற்றி தொடர்ந்து நிலைக்கும் என்பார். தோனியின் இந்த வார்த்தை இனி கிரிக்கெட் விளையாட உள்ள அனைவருக்கும் ஒரு பைபிள் போன்றது ஆகும்

நடுவரை சொதப்பல்
சென்சூரியன் டெஸ்டில் இந்திய அணி வென்றாலும், அணியில் ஒரு மெகா சைஸ் ஓட்டை உள்ளது. ராகுலில் அபார ஆட்டமும், இந்தியாவின் அபார பந்துவீச்சும், அந்த குறையை வெளியே தெரியாமல் பார்த்து கொண்டது. அந்த குறை வேறு எதும் அல்ல, இந்திய அணியின் நடுவரிசை தான். புஜாரா, கோலி, ரஹானே என மூன்று பேரும் ரன் அடிக்காமல் இருப்பது தான் பிரச்சினை

புஜாரா நீக்கம்?
சென்ஞ்ரியன் டெஸ்டில் முதல் இன்னிங்சில் புஜாரா டக் அவுட்டாகினார், இரண்டாவது இன்னிங்சிலும் சொற்ப ரன்கள் தான். வெறும் பந்தை எதிர்கொள்வது மட்டும் டெஸ்ட் போட்டி அல்ல கொஞ்சமாவது ரன் அடிக்க வேண்டும் அல்லவா? . முதல்டெஸ்ட்டில் ராகுல் மட்டும் சதம் அடிக்கவில்லை என்றால் நிச்சயம் இந்தியா தோல்வி அடைந்திருக்கும்.

இளம் வீரர்களுக்கு வாய்ப்பு
அனைத்து போட்டியிலும் ராகுலே இந்தியாவை காப்பாற்ற முடியுமா? புஜாரா ஃபார்மில் இல்லை என்றால் இளம் வீரர்கள் விஹாரி, ஸ்ரேயாஸ் ஐயருக்காவது வாய்ப்பு வழங்க வேண்டும். தென்னாப்பிரிக்க மண்ணில் இந்தியா தொடரை கைப்பற்ற வேண்டும் என்றால் நிச்சயம் கோலியின் மட்டையிலிருந்து சதம் வந்தே ஆக வேண்டும். இதனால் குறையை கோலி நிவர்த்தி செயவாரா இல்லை, இளம் வீரர்களை தொடர்ந்து பேஞ்சில் அமர வைப்பாரா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications











