Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs SA- இந்திய அணியில் ஒரே இடத்திற்கு 3 பேர் போட்டி.. சூர்யகுமார் யாருக்கு வாய்ப்பு தருவார்

மும்பை : இந்தியா, தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 வெள்ளிக்கிழமை இரவு எட்டு முப்பது மணிக்கு டர்பன் நகரில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் சூரிய குமார் யாதவ் தலைமையில் இந்திய அணி வீரர்கள் பங்கேற்கிறார்கள். ரோகித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட ஜாம்பவான்கள் ஓய்வு பெற்றுவிட்டனர்.

இந்த நிலையில், இந்திய அணி வெளிநாட்டுக்கு சென்று முதல் முறையாக பெரிய தொடரில் விளையாடுகிறது. நியூசிலாந்துக்கு எதிராக சீனியர் வீரர்கள் டெஸ்ட் தொடரில் சொதப்பியதால் இளம்ப டை இழந்த மானத்தை காப்பாற்றுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது.

ind vs sa suryakumar yadav hardik pandya

இந்த சூழ்நிலையில் இந்திய அணியில் ஒரே இடத்திற்கு மூன்று பேர் போட்டி போடுவதால் யாருக்கு வாய்ப்பு தருவது என்ற குழப்பத்தில் சூரியகுமார் யாதவும் இருக்கின்றார். இந்திய அணியில் சஞ்சு சாம்சன், அபிஷேக் ஷர்மா, திலக் வர்மா, சூரியகுமார் யாதவ்,ஹர்திக் பாண்டியா, ரிங்கு சிங், அக்சர் பட்டேல் ஆகிய ஏழு வீரர்கள் தங்களுடைய இடத்தை பிடித்துக் கொள்வார்கள்.

இந்த நிலையில் வேக பந்துவீச்சாளராக ஆர்ஸ்தீப் சிங் யாஸ் தயால் என இருப்பார்கள். இந்த சூழலில் எட்டாவது இடத்தில் யாரை விளையாட வைப்பது என்பது தான் தற்போது குழப்பத்தில் இருக்கிறது. இந்திய அணி பொதுவாக இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களை வைத்து டி20 கிரிக்கெட்டில் விளையாடும். அப்படி இருக்க எட்டாவது இடத்தில் ரவி பிஸ்னாய்க்கு வாய்ப்பு தருவதா இல்லை தமிழக கிரிக்கெட் வீரர் வருண் சக்கரவர்த்திக்கு வாய்ப்பு தருவதா என்ற குழப்பம் ஏற்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில் தென்னாப்பிரிக்கா ஆடுகளத்தில் சுழற் பந்துவீச்சு எடுபடுமா என்ற குழப்பமும் ஏற்பட்டிருக்கிறது. சுழற் பந்துவீச்சாளர்களை ஒருவேளை அடித்து நொறுக்கி விட்டால் என்ன செய்வது என்ற சந்தேகமும் இருக்கிறது. இதனால் எட்டாவது இடத்தில் இரண்டு சுழற் பந்துவீச்சாளர்களையும் நீக்கிவிட்டு ஆல்ரவுண்டராக அணியில் இடம் பிடித்திருக்கும் ரமந்திப் சிங்குக்கு வாய்ப்பு கொடுக்கலாமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

தென்னாபிரிக்கா போன்ற ரன்குவிப்புக்கு சாதகமான ஆடுகளத்தில் விளையாடும் போது பந்துவீச்சாளர்கள் அதிக அளவு இருப்பது நல்லது. அக்சர்பட்டேல், ஹர்திக் பாண்டியாவை சேர்த்து ஐந்து பவுலர்கள் அணியில் இருக்கிறார்கள். தேவைப்பட்டால் திலக் வர்மா, அபிஷேக் ஷர்மா போன்ற வீரர்களும் பந்து வீச முடியும்.

இதனால் ரமந்திப் சிங் போன்ற பேட்டிங் ஆல்ரவுண்டரை பயன்படுத்தி பேட்டிங் பலத்தை அதிகரிக்கலாமா என்ற குழப்பத்திலும் சூரியகுமார் யாதவ் இருக்கின்றார். இல்லையென்றால் ஏதாவது வீரராக ஜித்தேஷ் சர்மாவை விக்கெட் கீப்பராக பயன்படுத்திவிட்டு எட்டாவது வீரராக அக்சர் பட்டேலை களம் இருக்கலாம் என்ற ஐடியாவும் இந்திய அணிக்கு இருக்கிறது. இதனால் ஆடுகளம் சூழல், வானிலை எவ்வாறு இருக்கிறது என்பதை பொறுத்துதான் பிளேயிங் லெவனை இந்திய அணி தீர்மானம் செய்யும்.

Story first published: Thursday, November 7, 2024, 18:49 [IST]
Other articles published on Nov 7, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+