Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs SA - இன்று இந்தியா உலககோப்பையை வெல்ல அதிக வாய்ப்பு இருக்கிறது.. 3 முக்கிய காரணங்கள்

பார்படாஸ் : டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் இந்தியா தென்னாப்பிரிக்கா அணி பலப்பரீட்சை நடத்துகிறது. இந்திய அணி கடந்த 11 ஆண்டுகளாக எந்த ஒரு ஐசிசி தொடரையும் வெல்லவில்லை. டி20 கிரிக்கெட்டை பொறுத்த வரை 2007 ஆம் ஆண்டு தான் இந்தியா சாம்பியன் பட்டத்தை வென்றது.

தற்போது பத்து ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி t20 உலக கோப்பையின் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றிருக்கிறது. இந்த இறுதிச்சுற்றில் இந்தியா பலம் வாய்ந்த தென்னாப்பிரிக்காவை தோற்கடிக்குமா? என்ற கலக்கத்தில் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

t20 world cup ind vs sa virat kohli

இந்த நிலையில் இன்றைய ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெறவே அதிக வாய்ப்பு இருக்கிறது. இதற்கான காரணங்கள் என்ன என்பதை தற்போது பார்க்கலாம். தென்னாப்பிரிக்காவின் பேட்டிங்கை காட்டிலும் இந்திய வீரர்களின் பேட்டிங் சிறப்பாகவே இருக்கிறது. கேப்டன் ரோகித் சர்மா, ரிஷப் பந்த் சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா போன்ற வீரர்கள் நல்ல பார்மில் இருக்கிறார்கள்.

இதே போல் விராட் கோலி இந்த தொடரில் பெரிய அளவில் சாதிக்கவில்லை என்றாலும் பைனலில் அதிக ரன்கள் அடிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்திய அணி பேட்டிங்கில் ஒரு பவர் ஹவுஸ் ஆக விளங்குகிறது. இந்தியா வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுவதற்கான இரண்டாவது காரணம் பந்துவீச்சு சிறப்பாக இருக்கிறது.

பும்ராவில் தொடங்கி அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ், ஆர்ஸ்தீப் சிங் என இந்திய வீரர்கள் பிரமாதமாக பந்து வீசி வருகிறார்கள். குறிப்பாக வெஸ்ட் இண்டீஸ் ஆடுகளங்கள் சுழற் பந்து வீச்சுக்கு சாதகமாக செயல்படுகிறது. இதனால் இந்திய பவுலர்களின் கையே இன்றைய ஆட்டத்தில் ஓங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைவிட மூன்றாவது காரணம் ஒன்று இருக்கிறது.

அது என்னவென்றால் தென்னாபிரிக்க அணி முக்கிய போட்டிகளில் பெரிய அளவில் சாதித்தது கிடையாது. இதனால் அவர்களுக்கு சோக்கர்ஸ் என்ற ஒரு பெயரும் இருக்கிறது. பதற்றமான சூழலில் தென்னாப்பிரிக்க அணி விக்கெட்டுகளை இழப்பது புதிது கிடையாது. தென்னாப்பிரிக்காவை காட்டிலும் இந்திய அணிக்கு நெருக்கடி சூழலில் எப்படி விளையாட வேண்டும் என்று யுக்தி நன்கு தெரியும். இந்த காரணங்களால் இன்றைய ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெறவே அதிக வாய்ப்பு இருப்பதாக கிரிக்கெட் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Story first published: Saturday, June 29, 2024, 14:22 [IST]
Other articles published on Jun 29, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+