Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs SA 3rd ODI – இந்திய அணியில் 4 அதிரடி மாற்றங்கள்..!! டாசில் சரியான முடிவு எடுத்தாரா ராகுல்?

கேப் டவுன்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதில் நாம் சொன்னது போலே இந்திய அணியில் 4 மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் விராட் கோலிக்கு ஓய்வு வழங்கப்படவில்லை

இந்திய அணியில் மேற்கொண்ட மாற்றங்கள், பிட்ச் ரிப்போர்ட் குறித்து தற்போது காண்போம்.

ஆடுகளம்

ஆடுகளம்

போட்டியின் முதல் 10 ஓவரில் ஆடுகளம் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக செயல்படும். இதனால் தான் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. மேலும், கடைசியாக கேப் டவுனில் நடைபெற்ற 4 ஒருநாள் போட்டியிலும், மூன்றில் இரண்டாவது பேட்டிங் செய்த அணி தான் வெற்றி பெற்றது. இந்த வரலாற்றை வைத்து கே.எல்.ராகுல் இந்த முடிவை எடுத்திருக்கலாம்

அதிரடி மாற்றம்

அதிரடி மாற்றம்

முதல் 2 ஒருநாள் போட்டியில் பேட்டிங்கில் சொதப்பிய தமிழக வீரர் வெங்கடேஷ் ஐயர் நீக்கப்பட்டு, சூர்யகுமார் யாதவ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதே போன்று அஸ்வினுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு ஜெயந்த் யாதவ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் பந்துவீச்சையே மறந்தது போல் செயல்பட்ட புவனேஸ்வர் குமார் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்

தீபக் சாஹர்

தீபக் சாஹர்

அவருக்கு பதிலாக ஸ்விங் பவுலர் தீபக் சாஹர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதே போன்று ஷர்துல் தாக்கூருக்கு பதிலாக பிரஷித் கிருஷ்ணாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எனினும் இளம் வீரர் ருத்துராஜ் கெய்க்வாட்டுக்கு இன்றைய போட்டியில் விளையாட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

பிளேயிங் லெவன்

பிளேயிங் லெவன்

கே.எல்.ராகுல், ஷிகர் தவான், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட், ஜெயந்த் யாதவ், தீபக் சாஹர், பிரஷித் கிருஷ்ணா, பும்ரா, யுஸ்வேந்திர சாஹல்.

Story first published: Sunday, January 23, 2022, 14:48 [IST]
Other articles published on Jan 23, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+