இந்தியாவுக்கு 288 ரன்களை இலக்காக நிர்ணயித்த தென்னாப்பிரிக்கா.. டி காக் அதிரடி சதம்..
கேப் டவுன்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது
ஆறுதல் வெற்றிக்காக களமிறங்கிய இந்திய அணி, சூர்யகுமார் யாதவ், பிரசித் கிருஷ்ணா, ஜெயந்த் யாதவ், தீபக் சாஹர் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்
தொடக்க வீரராக டி காக் மற்றும் ஜென்னிமன் மாலன் ஆகியோர் களமிறங்கினர்

இந்தியாவுக்கு நல்ல தொடக்கம்
தீபக் சாஹர் பந்துவீச்சில் மாலன் 1 ரன்னில் ஆட்டமிழக்க, கேப்டன் பெவுமா 8 ரன்களில் ரன் அவுட்டானார். இதனையடுத்து ஜோடி சேர்ந்த டி காக்.வெண்டர்டுசன் ஆகியோர் பொறுப்பாக விளையாடி ரன்களை சேர்த்தனர். குறிப்பாக டி காக் இந்திய பந்துவீச்சாளர்களின் பந்துகளை பவுண்டரிக்கு விரட்டினார்

டி காக் சதம்
அதிரடியாக விளையாடிய டி காக், இந்தியாவுக்கு எதிராக 6வது ஒருநாள் சதத்தை பூர்த்தி செய்தார் இந்த ஜோடி 4வது விக்கெட்டுக்கு 144 ரன்கள் சேர்த்தது. டி காக் 124 ரன்கள் எடுத்திருந்த போது பும்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் அதிரடியை காட்டிய வெண்டர்டுசன் 52 ரன்கள் எடுத்திருந்த போது சாஹல் பந்தில் பெவிலியன் திரும்பினார்.

பிரஷித் கிருஷ்ணா
நடப்பு ஒருநாள் தொடரில் தற்போது தான் வெண்டர்டுசன் முதல் முறையாக ஆட்டமிழந்தார்.இதனைத் தொடர்ந்து டேவிட் மில்லர் தன் பங்கிற்கு 39 ரன்கள் சேர்க்க, இறுதியில் டுவைன் பிரிட்டோரியஸ் 20 ரன்கள் எடுத்தார். தென்னாப்பிரிக்க அணி 300 ரன்களை தாண்டும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடைசி ஓவரில் பிரஷித் கிருஷ்ணா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்

288 ரன்கள் இலக்கு
இதனால் தென்னாப்பிரிக்க அணி 49.5வது ஓவரில் 287 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பிரசித் கிருஷ்ணா 3 விக்கெட்டுகளை வீழ்த்த, தீபக் சாஹர், பும்ரா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனையடுத்து இந்த இலக்கை இந்திய அணி வீரர்கள் துரத்தி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications