
புது சர்ச்சை
இந்நிலையில் இந்த போட்டியில் மோசமாக நடந்துக்கொண்டதாக ஆரோன் ஃபிஞ்ச் மீது கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆட்டத்தின் 9வது ஓவரில் கேமரோன் க்ரீன் வீசிய பந்தை ஜாஸ் பட்லர் எதிர்கொண்டார். ஆஃப் சைட்டில் ஷார்ட் பாலாக வந்த அந்த பந்தை பட்லர் பவுண்டரிக்கு அடிக்க முயன்ற போது மிஸ்ஸாகி கீப்பரிடம் சென்றது.

டி.ஆர்.எஸ் சர்ச்சை
அந்த பந்தை பிடித்த கீப்பர் மேத்யூ வேட் அவுட் என அம்பயர்களிடம் கோரினார். ஆனால் அம்பயர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனையடுத்து அங்கு சென்ற கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச் டிஆர்எஸ் எடுக்கலாமா என கேட்க, மேத்யூ வேட் உறுதியாக கூறவில்லை. இறுதியில் அவர் எடுக்கலாம் என முடிவு எடுப்பதற்குள் 15 விநாடி நேரம் முடிந்துவிட்டது. இதனால் அம்பயர்கள் டி.ஆர்.எஸ்-யும் ஏற்றுக்கொள்ளவில்லை.

ஃபிஞ்ச்-ன் கோபம்
இதனால் மிகவும் கோபமடைந்த ஆரோன் ஃபிஞ்ச் கெட்ட வார்த்தை பேசினார். அதாவது, " F***ing 15 விநாடிக்குள் உறுதியாக தெரிந்திருக்கலாம்" என அம்பயர் முன்பே கெட்ட வார்தையில் பேசிவிட்டு சென்றார். இதுகுறித்த வீடியோக்கள் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது. இது ஐசிசி விதிகளுக்கு புறம்பானது ஆகும்.

ஐசிசி-ன் நடவடிக்கை
இதனையடுத்து ஆரோன் ஃபிஞ்ச் மீது ஐசிசி நடவடிக்கை எடுத்துள்ளது. அதாவது அவருக்கு தடைவிதிப்பதற்கான முதல் புள்ளியை கொடுத்துள்ளது. அதாவது ஒரு வீரர் 24 மாதங்களுக்குள் 4 புள்ளிகளை பெற்றால் இடை நீக்கம் அல்லது தடை விதிக்கப்படுவார். டி20 உலகக்கோப்பை நெருங்கி வரும் சூழலில் ஃபிஞ்ச் இப்படி செய்திருப்பது பேசுப்பொருளாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











