Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய அணியில் செய்ய வேண்டிய 2 மாற்றங்கள்.. நாளை வாழ்வா? சாவா? போட்டி.. தொடரை இழக்கும் அபாயம்

விசாகப்பட்டினம்: இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி நாளை விசாகப்பட்டினத்தில் நடைபெறுகிறது.

Recommended Video

IND vs SA 3rd T20-யின் Predicted Playing 11 என்ன? Aanee's Appeal | *Cricket | OneIndia Tamil

5 போட்டிகள் கொண்ட தொடரில் தென்னாப்பிரிக்க அணி 2க்கு0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

நாளைய போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை வெல்லும் வாய்ப்பு இருக்கும். இதனால் நாளைய போட்டி பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

சுழற்பந்துவீச்சு செயல்பாடு

சுழற்பந்துவீச்சு செயல்பாடு

இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது பந்துவீச்சு தான். பந்துவீச்சில் பும்ரா, முகமது ஷமி ஆகியோர் இல்லாததால் இந்தியா சொதப்புகிறது. இதனால் , அடுத்த போட்டிக்கான பிளேயிங் லெவனில் இந்தியா நிச்சயம் மாற்றம் செய்ய வேண்டிய நிலையில் உள்ளது. நேற்றைய ஆட்டத்தில் கூட இரண்டு சுழற்பந்துவீச்சாளர்களும் 5 ஓவரில் 68 ரன்களை விட்டு கொடுத்தனர். இதில் சாஹல் ஒரு விக்கெட் மட்டுமே எடுத்துள்ளார்.

மாற்றம் தேவை

மாற்றம் தேவை

இதனால், சுழற்பந்துவீச்சாளரை ஒருவரையாவது அடுத்த போட்டிக்கு மாற்ற வேண்டும் . இதில் சாஹலுக்கு பதில் ரவி பிஸ்னாயை அணியில் சேர்ப்பது நலம். ரவி பிஸ்னாய் கூகுளிகளை வேகமாக வீச கூடியவர். தென்னாப்பிரிக்க வீரர்கள் கூகுளி பந்தை அடிப்பதில் சிரமப்படுவார்கள். இல்லையேனில் சாஹலை வைத்துவிட்டு அக்சர் பட்டேலை அணியிலிருந்து நீக்கலாம்.

ஆர்ஸ்தீப் சிங்

ஆர்ஸ்தீப் சிங்

இந்திய அணியின் பந்துவீச்சை தென்னாப்பிரிக்க வீரர்கள் லாவகமாக எதிர்கொண்டு விளையாடுகிறார்கள். இதனால், அவர்கள் எதிர்கொள்ள திணறும் வகையில் பந்துவீச்சாளர்களை அணியில் சேர்க்கலாம். இந்தியாவின் டெத் பவுலிங் மோசமாக இருப்பதால், அணியில் இருக்க கூடிய ஆர்ஷ்தீப் சிங்கை பிளேயிங லெவனில் சேர்க்கலாம்.வேண்டும் என்றால் ஆவேஷ் கானுக்கு ஓய்வு வழங்கலாம்.

ரிஷப் பண்ட் மிஷன்

ரிஷப் பண்ட் மிஷன்

இதை தவிர கேப்டன் ரிஷப் பண்ட் பந்துவீச்சாளர்களை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை கற்று கொள்வது அவசியம். ஆர்ஷ்தீப் சிங்கை கடைசியிலும், ஹர்சல் பட்டேல் மற்றும் சுழற்பந்துவீச்சாளர்களை மிடில் இன்னிங்சிலும் பயன்படுத்த வேண்டும். இத்தகைய மாற்றங்களை செய்து, தென்னாப்பிரிக்காவுக்கு நெருக்கடி தரலாம்.

Story first published: Monday, June 13, 2022, 18:09 [IST]
Other articles published on Jun 13, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+