
அசத்தல் தொடக்கம்
தொடக்கம் நன்றாக இருந்தால், அனைத்தும் சரியாக இருக்கும் என்று சொல்வார்களே. அதன் படி, நேற்றைய ஆட்டத்தில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ருத்தராஜ் மற்றும் இஷான் கிஷன் முதல் விக்கெட்டுக்கு 97 ரன்களை சேர்த்தனர். கடந்த போட்டியில் ஒரு ரன்னில் ஆட்டமிழந்த ருத்துராஜ், நேற்று முதன் முறையாக அரைசதம் விளாசினார்.

சாஹல் ஸ்டைல்
இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணம், பந்துவீச்சாக பார்க்கப்பட்டது. அதிலும் சுழற்பந்து வீச்சு சுத்தமாக எடுப்படவில்லை. இந்த நிலையில் , நேற்றைய ஆட்டத்தில் சாஹல் அபாரமாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தி, தென்னாப்பிரிக்காவுக்கு கடும் நெருக்கடி கொடுத்தார். அக்சர் பட்டேலும் கட்டுக்கோப்பாக பந்துவீசி 1 விக்கெட் எடுத்தார்.

வித்தியாசமான பவுலிங்
சாஹல், தனது லேக் பிரேக் வகை பந்துகளை வேகமாக வீசினார், அது அவருக்கு நல்ல பலனை தந்தது. மேலும் பந்தை பிடிக்கும் Position ஐயும் அவர் கொஞ்சம் மாற்றினார். இதே போன்று ஹர்சல் பட்டேல், நேற்று 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்திய வீரர்கள் லேக் கட்டர், ஸ்லோ பால், நக்குல் பால் வகைகளை நேற்று அதிகம் வீசினர். இதனால் அடிக்க முற்பட்டு தென்னாப்பிரிக்க வீரர்கள் கேட்ச் ஆகினர்.
Recommended Video

டிராவிட் எச்சரிக்கை
இதே போன்று நேற்று தென்னாப்பிரிக்க வீரர்கள் 2 கேட்ச் வாய்ப்புகளை விட்டதும் இந்தியாவுக்கு சவாலாக மாறியது. இந்த நிலையில், ஒரே இரவில் இந்திய வீரர்கள் பிளானை சரியாக நடைமுறைப்படுத்தியதற்கு டிராவிட் விட்ட டோஸ் தான் காரணம் என்று கூறப்படுகிறது. உலகக் கோப்பை அணியில் இடம்பெற வேண்டும் என்றால் களத்தில் திறமையை வெளிப்படுத்த வேண்டும், இல்லையெனில் வேறு வீரருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று டிராவிட் கூறியதாக தெரிகிறது.


Click it and Unblock the Notifications