Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs SA 3வது டி20 போட்டி எப்போது? எத்தனை மணிக்கு போட்டி துவங்கும்? முழு விவரம்

செஞ்சுரியன்: தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. அதில் இந்திய அணி 1 - 1 என சமநிலையில் உள்ளது.

இந்த நிலையில், மூன்றாவது டி20 போட்டி எப்போது, எத்தனை மணிக்கு துவங்கும்? எந்த சேனல் மற்றும் மொபைல் செயலியில் இந்த போட்டியை இலவசமாக காணலாம் என பார்க்கலாம்.

ind vs sa india south africa 20

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் மோத உள்ள மூன்றாவது டி20 போட்டி எந்த தேதி மற்றும் நேரத்தில் நடைபெற உள்ளது?

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் மோத உள்ள மூன்றாவது டி20 போட்டி செஞ்சூரியன் நகரில் நடைபெற உள்ளது. நாளை (புதன் கிழமை அன்று) இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு இந்தப் போட்டி துவங்கும். இரவு 8 மணிக்கு டாஸ் போடப்படும்.

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் மோத உள்ள மூன்றாவது டி20 போட்டியை எந்த சேனல் மற்றும் மொபைல் செயலியில் பார்க்கலாம்?

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா மோதும் 3வது டி20 போட்டியின் நேரலையை ஸ்போர்ட்ஸ் 18 குழும தொலைக்காட்சியில் காணலாம். மொபைல் மற்றும் இணையதளத்தில் இந்த போட்டியின் நேரலை பார்க்க விரும்புபவர்கள் ஜியோ சினிமா செயலி மற்றும் ஜியோ சினிமா இணையதளத்தில் காணலாம். இந்த தொடர் இலவசமாக ஒளிபரப்பப்படுகிறது.

இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியில் பதிலடி கொடுத்த தென்னாப்பிரிக்க அணி, 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இதை அடுத்து இரு அணிகளும் 1 - 1 என சம நிலையில் உள்ளன. அடுத்த இரண்டு போட்டிகளையும் வெல்லும் அணி இந்த தொடரை கைப்பற்றும்.

ஒருவேளை அடுத்த இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி ஒரு வெற்றியும் தென்னாப்பிரிக்கா அணி ஒரு வெற்றியும் பெற்றால் தொடரை இரு அணிகளும் சமனில் பகிர்ந்து கொள்ள வேண்டிய நிலை ஏற்படும் எனவே இரண்டு போட்டிகளையும் வெற்றி பெறுவதற்கு இந்திய அணி உற்சாகமாக களம் இறங்க உள்ளது

Story first published: Tuesday, November 12, 2024, 14:28 [IST]
Other articles published on Nov 12, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+