டிராவிட்-க்கு இந்த நிலைமையா..?? ஃபார்முலாவை மீறி எடுத்த அதிரடி முடிவு.. 3 முக்கிய வீரர்களுக்கு ஆப்பு
விசாகப்பட்டினம்: தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் ராகுல் டிராவிட் முக்கிய முடிவை எடுக்க துணிந்துள்ளார்.
தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி முதல் 2 போட்டிகளில் மோசமான தோல்வியை சந்தித்துள்ளது.
வாழ்வா? சாவா? என்ற கட்டத்தில் இன்று 3வது டி20 போட்டி விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

3வது டி20 ஆட்டம்
ஐபிஎல் தொடரில் கலக்கி வந்த முக்கிய வீரர்கள் கூட, இந்த தொடரில் படு மோசமான சொதப்பி வருகின்றனர். எனவே இன்று பெரிய மாற்றத்தை அணிக்குள் கொண்டு வந்தால் மட்டுமே வெற்றியை பெற முடியும். வழக்கமாக ராகுல் டிராவிட் "தொடர்ந்து வாய்ப்பு தந்தால் தான் திறமையை காட்ட முடியும்" என நம்புவார்கள். ஆனால் இன்று அவற்றை புறக்கணித்து அதிரடி மாற்றங்கள் செய்ய துணிந்துள்ளதாக தெரிகிறது.

என்னென்ன மாற்றங்கள்
ஓப்பனிங்கில் ருதுராஜ் கெயிக்வாட் சொதப்பி வருகிறார். எனினும் வெங்கடேஷ் ஐயரை ஓப்பனிங் களமிறக்க விருப்பமில்லாததால், ருதுராஜ் தான் தொடர்ந்து ஓப்பனிங் ஆடவுள்ளார். அக்ஷர் பட்டேல் பேட்டிங், பவுலிங் என எதிலுமே உதவாததால் அவர் நீக்கப்படவுள்ளார். அவருக்கு மாற்றாக தீபக் ஹூடாவை களமிறக்க திட்டமிட்டுள்ளது. தீபக் ஹூடா பேட்டிங் மட்டுமின்றி சுழற்பந்துவீச்சிலும் உதவக்கூடியவர்.

பவுலிங் மாற்றம்
நம்பிக்கை நட்சத்திரங்களாக பார்க்கப்பட்ட ஆவேஷ் கான், ஹர்ஷல் பட்டேல் ஆகியோர் பெரியளவில் திறமையை காட்டவில்லை. எனவே இவர்களில் யாரேனும் ஒருவர் நீக்கப்பட்டு, அர்ஷ்தீப் சிங்கிற்கு வாய்ப்பு அளிக்கப்படலாம் எனத்தெரிகிறது.
Recommended Video

முக்கியமான மாற்றம்
முக்கிய மாற்றமாக யுவேந்திர சாஹல் பார்க்கப்படுகிறார். ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்களை கைப்பற்றிய சாஹல், தென்னாப்பிரிக்க தொடரில் இதுவரை 6.1 ஓவர்களை வீசி 75 ரன்களை வாரி வழங்கியுள்ளார். இதனால் அவர் நிச்சயம் மாற்றப்படுவார். மாற்று வீரராக ரவி பிஷ்னாய் அழைக்கப்படலாம்.


Click it and Unblock the Notifications