Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs SA: 7 ரன்னுக்கு 3 விக்கெட் காலி.. தென்னாப்பிரிக்காவை அலறவிட்ட இந்தியா.. ஹர்ஷித் ராணா சம்பவம்

தர்மசாலா: இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையிலான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய பந்துவீச்சாளர்கள் ஆரம்பம் முதலே அனல் பறக்க பந்துவீசி தென்னாப்பிரிக்காவை நிலைகுலையச் செய்தனர். ஆட்டத்தின் முதல் மூன்று ஓவர்களுக்குள்ளேயே 3 முக்கிய விக்கெட்டுகளை இழந்து தென்னாப்பிரிக்கா அணி 7 ரன்களுக்குத் தடுமாறி வருகிறது.

தர்மசாலாவில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். கேப்டனின் நம்பிக்கையைக் காப்பாற்றும் வகையில் இந்திய இளம் பந்துவீச்சாளர்கள் செயல்பட்டனர்.

IND vs SA 3rd T20 South Africa lost 3 wickets in 3 overs as Harshit Rana took Top Order in Dharamsala T20I

ஹர்ஷித் ராணா - அர்ஷ்தீப் கூட்டணி

இந்திய அணியின் முன்னணி பந்துவீச்சாளரான ஜஸ்பிரித் பும்ராவுக்கு இந்த போட்டியில் ஓய்வு அளிக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக இளம் வீரர் ஹர்ஷித் ராணா சேர்க்கப்பட்டார். தனக்குக் கிடைத்த வாய்ப்பை மிகச்சரியாகப் பயன்படுத்திக்கொண்டார் ராணா.

போட்டியின் முதல் ஓவரை வீசிய ஹர்ஷித் ராணா, ஆபத்தான வீரரான குயின்டன் டி காக்கை வெறும் 1 ரன்னில் வெளியேற்றி இந்தியாவுக்குச் சிறப்பான தொடக்கத்தைத் தந்தார். அடுத்து இரண்டாவது ஓவரை வீசிய அர்ஷ்தீப் சிங், ரீசா ஹென்ரிக்ஸை ரன் ஏதும் எடுக்கவிடாமல் டக் அவுட் ஆக்கி வெளியேற்றினார்.

மீண்டும் பந்துவீச வந்த ஹர்ஷித் ராணா, மூன்றாவது ஓவரின் முதல் பந்திலேயே இளம் வீரர் டெவால்ட் பிரேவிஸை 2 ரன்கள் எடுத்த நிலையில் வீழ்த்தினார். இதன் மூலம் 3.1 ஓவர்கள் முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 7 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து படுமோசமான நிலைக்குத் தள்ளப்பட்டது.

அணியில் மாற்றம்

இந்த போட்டியில் பும்ரா மட்டுமின்றி, ஆல்-ரவுண்டர் அக்சர் படேலுக்கும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அவருக்குப் பதிலாகச் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். தற்போது 5 போட்டிகள் கொண்ட இத்தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இந்த 3-வது போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரில் முன்னிலை வகிக்கும் என்பதால், இந்தத் தொடக்க விக்கெட்டுகள் இந்தியாவுக்கு மிகப்பெரிய பலமாகப் அமைந்தது.

Story first published: Sunday, December 14, 2025, 19:49 [IST]
Other articles published on Dec 14, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+