மீண்டும் டி.ஆர்.எஸ். சர்ச்சை..!! அழுகுனி ஆட்டம் ஆடும் தென்னாப்பிரிக்கா..3ஆம் நடுவர் முடிவால் சர்ச்சை
கேப்டவுன்: இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி சர்ச்சைகளுக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது
Recommended Video
நடுவரின் முடிவு தவறாக இருக்கும் என்று நினைக்கும் வீரர்கள் மூன்றாம் நடுவரின் உதவியை நாட பயன்படுத்தப்படுவது தான் டி.ஆர்.எஸ்.
ஆனால் அந்த மூன்றாவது நடுவரின் முடிவே ஒருதலைப்பட்சமாக இருந்தால் என்ன செய்வது? அது தான் கடந்த 2 நாட்களாக நடைபெற்றது.

டி.ஆர்.ஏஸ். சர்ச்சை
நேற்றை ஆட்டத்தில் அஸ்வின் வீசிய பந்து டீன் எல்காரின் முட்டிக்கு கீழ் பட்டது. அதற்கு கள நடுவர் அவுட் என்று அறிவித்தார். ஆனால் Hawk Eye தொழில்நுட்பம், பந்து ஸ்டம்பில் படவில்லை என்று தவறாக கணித்தது. இதனால் மூன்றாம் நடுவர் நாட் அவுட் என்று அறிவிக்க, பெரும் சர்ச்சை உருவானது. இந்திய வீரர்கள் களத்திலே கடுமையாக திட்டினர்

கோலி முடிவு
இந்த நிலையில், முகமது ஷமி இன்று வெண்டர்டுசனுக்கு பந்து வீசினார். அப்போது வெண்டர்டுசனின் பேட்டில் பந்து பட்டதும், அவரது பேட் தரையில் பட்டதும், ஒரே தருணமாக இருந்தது. இதனால் கள நடுவர் அவுட் இல்லை என்று அறிவித்துவிட்டார். ஆனால் விராட் கோலி நடுவரின் முடிவை மறுபரீசிலினை செய்தார்

ஸ்னிக்கர் தெளிவு
இதனையடுத்து, மீண்டும் மூன்றாம் நடுவர் ஸ்னிக்கர் தொழில்நுட்பத்தை வைத்து பேட்டில் பந்து பட்டதா என்று பார்த்தார். அப்போது பேட் தரையில் பட்ட தருணமும், பந்து பேட்டில் பட்ட தருணமும் ஒன்றாக இருந்தது. குறிப்பாக பந்து பேட்டை கடக்கும் போது, பேட் தரையில் பட்டதால், மூன்றாம் நடுவரும் குழப்பம் அடைந்தார். ஆனால் பேட்டை பந்து கடக்கும் போது ஸ்னிக்கரில் தெளிவாக காட்டியது

மீண்டும் சர்ச்சை
ஆனால் மூன்றாம் நடுவர், இது நாட் அவுட் இல்லை என்று அறிவித்தார். இதனால் மீண்டும் கடுப்பான கோலி, நடுவரிடம் கோபமாக பேசினார். பின்னர்,வெண்டர் டுசனிடம் பேட்டில் பந்து பட்டது உனக்கு தெலியாதா? உன்னை விட ஐந்து வயது குறைந்தவர் கூட மோதுகிறயா என்று கோபமாக கூறினார். இதனால் களத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.


Click it and Unblock the Notifications