பிளேயிங் லெவனில் குளறுபடி..!! டிராவிட் Vs கோலிக்கு இடையே ஈகோ மோதல்? சீனியர் வீரருக்கு ஏமாற்றம்..
கேப் டவுன்: இந்தியா , தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி கேப் டவுனில் தொடங்கியது
இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்த நிலையில் போட்டி தொடங்குவதற்கு முன் பிளேயிங் லெவன் தொடர்பாக கேப்டன் கோலிக்கும், பயிற்சியாளர் டிராவிட்க்கும் ஈகோ மோதல் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது
கேப் டவுனில் இந்தியா இதுவரை வெற்றி பெறவில்லை. இதனால் அனுபவ வீரர் ஒருவரை அணியில் தேர்வு செய்ய டிராவிட் முடிவு எடுத்திருந்தார். அதற்கு கோலி நோ சொல்லிவிட்டார்

டிராவிட் முடிவு
ஜோகனஸ்பர்க் டெஸ்டின் 2வது இன்னிங்சில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் டக் அவுட்டானார். இதனால் இந்தியாவின் வெற்றி பாதிக்கப்பட்டது. மேலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கு பிறகு ரிஷப் பண்ட் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை.இதனால் ரிஷப் பண்டை பெஞ்சில் உட்கார வைக்க டிராவிட் முடிவு எடுத்தார்

சாஹாவுக்கு வாய்ப்பு
ஏனெனில், கேப் டவுன் டெஸ்டில் இதுவரை இந்தியா தோற்றதுக்கு காரணமாக இந்தியாவின் முன்வரிசை வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததே காரணமாக இருந்தது. இதனால் நடுவரிசையை பலப்படுத்தும் விதமாக நியூசிலாந்து தொடரில் அரைசதம் விளாசி, பொறுமையாக விளையாடக் கூடிய சாஹாவுக்கு இந்த டெஸ்டில் வாய்ப்பளிக்க டிராவிட் முடிவு எடுத்தார்.

ரிஷப் தென்படவில்லை
இதனால் டிவிட்டரே அதிகமாக பயன்படுத்தாத விதர்மான் சாஹா, கேப் டவுன் டெஸ்டிற்கு தயாராகி வருவதாக பதிவிட்டு இருந்தார். மேலும் தாம் பயிற்சியில் ஈடுபட்ட புகைப்படங்களையும் சாஹா பதிவிட்டிருந்தார். அதற்கு ஏற்றார் போல் பி.சி.சி.ஐ. வெளியிட்ட புயிற்சி புகைப்படங்களில் ரிஷப் பண்ட் தென்படவில்லை
Recommended Video

கோலியின் ஓட்டு
இந்த நிலையில், தாம் ரிஷப் பண்டை தான் அணியில் தேர்வு செய்வேன் என்று விராட் கோலி பிடிவாதமாக இருந்துள்ளார். இதற்கு டிராவிட் , சாஹாவின் அனுபவம் கைக் கொடுக்கும் என்று கூறியுள்ளார். அதற்கு கோலி, ஆஸ்திரேலிய மண்ணில் ரிஷப் பண்ட் தான் அணியை காப்பாற்றியதாக கூறி தனது முடிவில் பிடிவாதமாக இருந்துள்ளார். இதனால் விராட் கோலி எடுத்த முடிவி சரியா இல்லை டிராவிட் சொன்னது சரியா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications