IND VS SA 3rd TEST - இந்தியாவுக்கு ஆரம்பமே அதிர்ச்சி..!! இந்தியாவை காப்பாற்ற போவது யார்?
கேப் டவுன்: தென்னாப்பிரிக்க மண்ணில் இது வரை இந்திய அணி டெட் தொடரை வென்றது இல்லை.
அதற்கு ஒரு நல்ல வாய்ப்பு இம்முறை கிடைத்துள்ளது. அதற்கு ஏற்றார் போல் முதல் டெஸ்டை இந்தியா அபாரமாக வென்றது
ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக 2வது டெஸ்டில் தென்னாப்பிரிக்கா வெல்ல, மூன்றாவது டெஸ்ட் பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது

100 ரன் பார்ட்னர்ஷிப்
இந்த நிலையில், இந்திய அணியில் தொடக்க வீரர்களை தவிர வேறு யாரும் ஃபார்மில் இல்லை. குறிப்பாக முதல் டெஸ்டின் முதல் இன்னிங்சில் இந்திய அணியின் தொடக்க வீரர்களான கோலி, அகர்வால் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 100 ரன்களுக்கு மேல் சேர்த்தது. இந்த பார்ட்னர்ஷிப்பே இந்திய அணிக்கு வெற்றியை தேடி தந்தது.

முக்கிய பொறுப்பு
ஆனால் இரண்டாவது டெஸ்ட்டில் இந்த ஜோடி காலை வாரியது. விராட் கோலியும் இல்லாததால் இந்திய அணி தோல்வியை தழுவியது.இந்த நிலையில் கேப் டவுன் டெஸ்டில் டாஸ் வென்று இந்திய அணி பேட்டிங் செய்தது. கே.எல்.ராகுலும், மாயங் அகர்வாலும் பொறுப்புடன் தங்களது இன்னிங்சை தொடங்கினர்

ஏமாற்றம்
இதனையடுத்து,மாயங் அகர்வால் 3 பவுண்டரிகள் விளாச, இந்திய அணி சிறப்பாக விளையாடுகிறது என ரசிகர்கள் நினைத்த நிலையில், கே.எல்.ராகுல் 12 ரன்களில் ஆட்டமிழந்தார். இதே போன்று விட வேண்டிய பந்தை தொட்ட அகர்வால் 15 ரன்களில் ஆட்டமிழந்தார்.
Recommended Video

சீனியர்களுக்கு பொறுப்பு
இதனால் முதல் 11 ஓவர் வரை விக்கெட்டே விழாமல் விளையாடிய இந்திய அணி, அடுத்த 10 பந்துகளில் அடுத்தடுத்து 2 விக்கெட்டை இழந்தது. இதனையடுத்து இந்திய அணியை சரிவிலிருந்து மீட்கும் பொறுப்பு சீனியர்கள் தலையில் வந்து விழுந்தது.


Click it and Unblock the Notifications