Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியா Vs தென்னாப்பிரிக்கா 3வது டெஸ்ட் – பிளேயிங் லெவன், பிட்ச் ரிப்போர்ட் இதோ..!!

கேப் டவுன்: இந்தியா, தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி வரும் செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது.

இந்தப் போட்டியில் பங்கேற்பதற்காக இரு அணி வீரர்களும் நேற்று கேப் டவுன் வந்தடைந்தனர்.

3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ள நிலையில், கடைசி போட்டி பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

காரணம்

காரணம்

ஜோகனஸ்பர்க் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பேட்டிங் மோசமாக இருந்தது. குறிப்பாக முதல் இன்னிங்சில் 202 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் காரணமாக பந்துவீச்சாளர்களுக்கும் கடும் நெருக்கடி ஏற்பட்டது. இதனால் இந்திய அணி வீரர்கள் பேட்டிங்கில் ரன் குவித்தால் மட்டுமே வெற்றி கிடைக்கும்.

நெருக்கடி

நெருக்கடி

ஜோகனஸ்பர்க் டெஸ்டில் அரைசதம் விளாசி இந்திய அணியின் சீனியர்களான புஜாரா, ரஹானே ஆகியோர் தப்பித்தனர். கடந்த 14 இன்னிங்ஸ்களாக சொதப்பி வரும் ரிஷப் பண்ட், கடந்த டெஸ்டில் முக்கிய கட்டத்தில் டக் அவுட் ஆனார். இதனால், கேப் டவுன் டெஸ்ட் அவருக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது

ஆடுகளம்

ஆடுகளம்

இதே போன்று கேப் டவுன் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்திய அணி உள்பட எவ்வித ஆசிய அணியும் இதுவரை டெஸ்ட் போட்டியில் வென்றது இல்லை. அந்த அளவுக்கு கடினமான மைதானமாக விளங்குகிறது. வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் கேப்டவுன் டெஸ்ட் இந்திய அணி வீரர்களுக்கு பெரும் சவாலாக தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

பிளேயிங் லெவன்

பிளேயிங் லெவன்

காயம் காரணமாக 2வது டெஸ்டில் களமிறங்காத விராட் கோலி, கடைசி டெஸ்டில் வர உள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சிராஜ்க்கும் காயம் ஏற்பட்டுள்ளதால் கடைசி டெஸ்டில் அவருக்கு பதிலாக உமேஷ் யாதவ், அல்லது இஷாந்த் சர்மா இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது, உத்தேச அணி 1,கே.எல்.ராகுல் 2, மாயங் அகர்வால் 3,புஜாரா, 4, விராட் கோலி, 5, ரஹானே 6, ரிஷப் பண்ட், 7, அஸ்வின், 8, சர்துல் தாக்கூர், 9, முகமது ஷமி. 10. உமேஷ் யாதவ்/இஷாந்த் சர்மா, 11, பும்ரா

Story first published: Sunday, January 9, 2022, 16:23 [IST]
Other articles published on Jan 9, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+