Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

BYE BYE Rahane..!! ரஹானேவின் இடம் காலி..!! மீண்டும் ரசிகர்களை வெறுப்பேற்றிய ரஹானே..

கேப் டவுன்: தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தடுமாறி வருகிறது.

டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை இந்திய அணி தேர்வு செய்தது. இந்திய அணி பெரிய ஸ்கோர் அடிக்க வேண்டும் என்ற நெருக்கடியில் களமிறங்கியது.

ஆனால் தொடக்க வீரர் ராகுல் 12 ரன்களிலும், மாயங் அகர்வால் 15 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்

சீனியர் ஜோடி

சீனியர் ஜோடி

இதனையடுத்து புஜாராவும், விராட் கோலியும் ஜோடி சேர்ந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் நல்ல பந்துகளை தொடாமல் விட்டும், மோசமான பந்துகளை பவுண்டரிக்கு விரட்டியும் ரன்களை சேர்த்தனர். இந்த ஜோடி 3வது விக்கெட்டுக்கு 62 ரன்கள் சேர்த்து அணியை சரிவிலிருந்து மீட்கும் பணியை மேற்கொண்டது.

ரஹானேவுக்கு மச்சம்

ரஹானேவுக்கு மச்சம்

சூப்பராக விளையாடிய புஜாரா 43 ரன்களில் எதிர்பாராத விதமாக ஆட்டமிழந்தார். இதனையடுத்து களத்திற்கு வந்தார் எங்கேயோ மச்சம் உள்ள கிரிக்கெட் வீரர் ரஹானே. ஆம், இவ்வளவு மோசமாக விளையாடியும் அணியில் இருந்தால் அதற்கு பெயர் மச்சம் தானே, ரஹானே 2 பவுண்டரிகளை விளாசினார்

சொற்ப ரன்கள்

சொற்ப ரன்கள்

ஆனால் கொஞ்சம் பவுண்ஸ் ஆன பந்தை தேவையில்லாமல் தொட்ட ரஹானே 9 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் இந்திய அணி 116 ரன்களுக்கு 4 விக்கெட்டை இழந்து தடுமாறி வருகிறது. கடந்த டெஸ்டின் 2வது இன்னிங்சில் அரைசதம் விளாசிய ரஹானே தற்போது மீண்டும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார்

Recommended Video

Kohli opts to bat, Umesh comes in for injured Siraj | IND vs SA 3rd Test | OneIndia Tamil
தவறான முடிவு

தவறான முடிவு

இதனால் ரஹானேவை அணியிலிருந்து நீக்க வேண்டும் என்று ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர். கடந்த 15 இன்னிங்சில் ரஹானே வெறும் 3 முறை தான் அரைசதம் அடித்துள்ளார். ரஹானேவுக்காக நல்ல ஃபார்மில் இருக்கும் விஹாரியை அணிலிருந்து கோலி நீக்கினார். இது தவறான முடிவாக அமைந்துவிட்டது.

Story first published: Tuesday, January 11, 2022, 18:22 [IST]
Other articles published on Jan 11, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+