Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இதைவிட மோசமான ஷாட் எங்கேயும் பார்க்க முடியாது,,!! கேட்சிங் பயிற்சி அளித்த ரிஷப் பண்ட்..!!

கேப் டவுன்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட்டில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் தொடர்பாக டிராவிட் மற்றும் கோலிக்கு இடையே ஈகோ மோதல் எழுந்தது.

கேப் டவுன் ஆடுகளம் பந்துவீச்சுக்கு சாதகமானது என்பதால் பேட்ஸ்மேன்கள் தங்களது விக்கெட்டை விரைவில் பறிகொடுப்பார்கள்.

இதனால், அனுபவமும், ஃபார்மில் உள்ள விதர்மான் சாஹாவை அணியில் சேர்க்க டிராவிட் குரல் கொடுத்தார்.

கோலி முடிவு

கோலி முடிவு

கடந்த 14 இன்னிங்சில் ரிஷப் பண்ட் ஒரு முறை தான் அரைசதம் அடித்துள்ளார். அவரது பேட்டிங் சராசரியும் குறைந்துள்ளது. ஆனால் சாஹா நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்டில் பொறுப்புடன் விளையாடினார். ஆனால் டிராவிட்டின் இந்த யோசனையை புறந்தள்ளிய விராட் கோலி, தலைக் கீழாக தான் குதிப்பேன் என்று கூறி ரிஷப் பண்டை தேர்வு செய்தார்.

பண்ட் பொறுமை

பண்ட் பொறுமை

ஜோகனஸ்பர்க் டெஸ்டில் மோசமான ஷாட் ஆடி டக் அவுட்டான ரிஷப் பண்ட், இம்முறை அரைசதமோ இல்லை சதமோ அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்கு தகுந்தால் போல் ரிஷப் பண்ட் பொறுமையாக விளையாடி விராட் கோலியுடன் 50 ரன்கள் பார்டனர்ஷிப்பை சேர்த்தார். அடடே, ரிஷப் பண்ட் திருந்திவிட்டார் என்று ரசிகர்களும் நினைத்தனர்

மோசமான ஷாட்

மோசமான ஷாட்

50 பந்துகளில் 27 ரன்கள் எடுத்த ரிஷப் பண்ட், மார்கோ ஜென்சன் வீசிய பந்தை நேராக ஃபில்டரிடம் அடித்து கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதனால் ரசிகர்கள் மீண்டும் ஏமாற்றம் அடைந்தனர். இதனையடுத்து பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அஷ்வினும் 2 ரன்களில் ஆட்டமிழக்க இந்திய அணி 175 ரன்களுக்கு 6 விக்கெட் இழந்து தடுமாறியது.

கோலி அரைசதம்

கோலி அரைசதம்

ஒரு முனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் பொறுப்பாக விளையாடிய விராட் கோலி அரைசதம் கடந்தார். இந்த மைதானத்தில் விராட் கோலி அடித்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். விராட் கோலி லாவகமாக டிரைவ் ஷாட்கள் ஆடி ரன்களை சேர்த்து வருகிறார். இதனால் விராட் கோலி 71வது சதம் அடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்

Story first published: Tuesday, January 11, 2022, 20:09 [IST]
Other articles published on Jan 11, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+