Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பும்ராவின் பூகம்பத்தில் சிக்கிய தென்னாப்பிரிக்கா..!! இந்திய பேட்ஸ்மேன்களுக்கு கடைசி வாய்ப்பு..!!

கேப் டவுன்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்டில் இந்திய அணி பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர்.

தொடரை தீர்மானிக்கும் கடைசி டெஸ்ட் கேப் டவுனில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்தது

இந்திய அணியில் விராட் கோலி அதிகபட்சமாக 79 ரன்கள் எடுத்தார்.இதனால் இந்திய அணி முதல் இன்னிங்சில் 223 ரன்கள் எடுத்தது.

அசத்தலான தொடக்கம்

அசத்தலான தொடக்கம்

இதனையடுத்து தென்னாப்பிரிக்க அணி தனது முதல் இன்னிங்சில் விளையாடியது. கேப்டன் டீன் எல்கார் 3 ரன்களில் ஆட்டமிழந்தார் 17 ரன்களுக்கு 1 விக்கெட் என்ற ஸ்கோருடன் இரண்டாவது நாள் ஆட்டத்தை தென்னாப்பிரிக்க தொடர்ந்தது. இன்றைய ஆட்டத்தின் 2வது பந்திலேயே பும்ரா வீசிய பந்தை சரியாக கணிக்க தவறியதால் ஏய்டன் மார்க்ரம் போல்ட் ஆனார். நைட் வாட்ச்மேனாக இருந்த கேஷவ் மகாராஜ், பொறுமையாக விளையாடி 25 ரன்கள் சேர்த்தார்

இந்தியாவின் தலைவலி

இந்தியாவின் தலைவலி

இதன் பின்னர் ஜோடி சேர்ந்த வெண்டர் டுசன் மற்றும் பீட்டசர்சன் பொறுமையாக விளையாடி ரன்களை சேர்த்தனர். 4வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 67 ரன்கள் சேர்த்தது. இதனையடுத்து உமேஷ் யாதவ் பந்துவீச வெண்டர் டுசன் 21 ரன்களில் ஆட்டமிழந்தார். இருப்பினும் மறுமுனையில் சிறப்பாக விளையாடிய பீட்டர்சன் அரைசதம் கடந்தார். டெம்பா பெவுமா 28 ரன்கள் எடுத்திருந்தார்

முகமது ஷமி

முகமது ஷமி

இந்த ஜோடி தென்னாப்பிரிக்காவை வலுவான நிலைக்கு அழைத்து சென்றது. அப்போது தான் ஆட்டத்தில் திருப்புமுனை ஏற்பட்டது. முகமது ஷமி வீசிய ஒரே ஓவரில் பெவுமா, வெர்ரைன் ஆகியோர் ஆட்டமிழக்க, இந்திய அணி மீண்டும் கேம்க்கு வந்தது. இந்தியாவுக்கு தலை வலியை தந்த பீட்டர்சனும், 72 ரன்களில் பும்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

பும்ரா 5 விக்கெட்

பும்ரா 5 விக்கெட்

இதனால் தென்னாப்பிரிக்க அணி 8 விக்கெட்டு இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்து தடுமாறியது. இதனையடுத்து அந்த அணியின் பின் வரிசை வீரர்கள் 9வது விக்கெட்டுக்கு 21 ரன்கள் சேர்த்து, இந்தியாவின் முதல் இன்னிங்சின் ஸ்கோர் அருகே வந்தனர். இதனையடுத்து கடைசி விக்கெட்டை பும்ரா வீழ்த்த தென்னாப்பிரிக்க அணி 210 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய பந்துவீச்சில் பும்ரா 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். 13 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி 2வது இன்னிங்சை தொடர்ந்தது.

Story first published: Wednesday, January 12, 2022, 20:31 [IST]
Other articles published on Jan 12, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+